வாஸ்துப்படி மனை வடிவங்கள்

 

 

 

 

 

மனிதர்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இம் மூன்று சரியாக கிடைத்தால் தன்னை வளப்படுத்தவும், நாட்டையும். வளப்படுத்த முடியும், வீடு வளம்பெற்றால் நாடு நலம் பெறும். நாம் வசிக்கும் வீட்டை முன்னோர்கள் சொல்லியப்படி அமைத்து துன்பமின்றி வாழ வேண்டும் என்றால் வாஸ்துவும் ஆயாதி கணிதமும் பொருந்தும் அமைப்பு வேண்டும்.

ஒரு வீட்டின் வடிவம் சதுரம், செவ்வகம் போன்ற அமைப்புடையதாக இருப்பது அவசியம் கூம்பு வடிவம். மூன்று பகுதியில் வளர்ச்சி வடிவம். செங்குத்தாக கூம்பு வடிவம், மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள மனைகளை வாங்க கூடாது
ஒவ்வொரு அறைகளும் வாஸ்து சாஸ்திர அளவின் படி அமைந்திருக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் அதிக நேரம் வீட்டிற்குள் பட வேண்டும்.அதிக இடம் வீட்டிற்கு வெளியில் வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வெளியே மிக அதிகமான வெட்ட வெளி இருக்க கூடாது.
ஆற்று கரையோரங்களிலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளிலும் வீடுகட்டி வசிப்பது தவறு

வீடு கட்ட ஆரம்பிக்க மிக சிறப்பு பெற்ற மாதங்களை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.அந்தவகையில் வைகாசி,ஆவணி, ஐப்பசி கார்த்திகை மாசி ஆக
வீடுகட்ட ஆரம்பிக்க நல்லது.
வீடு கட்ட உகந்த கிழமைகள் திங்கள், புதன்,வியாழன்,வெள்ளி,சனி நலம்