வாஸ்துப்படி கதவுகள் vastu for doors

வாஸ்து அமைப்பில் கதவுகள் என்று பார்க்கும்பொழுது மிகச் சரியான இடத்தில் இருக்கவேண்டும். கிழக்குப் பகுதி என்றால் வடகிழக்கு ஒட்டியும் , வடக்கு பகுதி என்றால் அதுவும் வடகிழக்குஒட்டியும் இருக்க வேண்டும் . தெற்குப்பகுதி எனும்பொழுது தென்கிழக்கு தெற்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு பகுதி எனும் பொழுது வடமேற்கு மேற்கு பார்த்து இருக்க வேண்டும். இந்த விதி அனைத்து அறைகளுக்கும் பொருந்தும். ஏன் சிறிய அறையாக இருக்கக்கூடிய  அறைக்கும் பொருந்தும்.ஒரு சிலர் சொல்வார்கள். பழந்தமிழர் முறையில் புதன் வாசல் அமைப்பு ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்பார்கள். அப்படி வைக்கும் பொழுது 50 சதவீத இல்லங்களில் தவறான வாசலாக அமைந்துவிடும். அதற்கென்று ஒரு விதி இருக்கிறது .மேற்குப்புறம் ஒரு பத்தடி , கிழக்கு புறம் ஒரு பத்தடி, இடையில் ஒரு பத்தடி  அமைத்து நீங்கள் அறைகளை வடக்கு பார்த்து அல்லது, தெற்கு பார்த்து வீடு அமைக்கும் பொழுது அதன் மையப்பகுதியில் வைத்தால் கதவுக்கும் குற்றமில்லை. அவர்கள் சொல்லுகிறபுதன் வாசலுக்கும்  குற்றமில்லை.ஆக மேற்கூறிய முறையை பின்பற்ற முடியவில்லை எனில், ஏற்கனவே நான் சொன்ன மாதிரி தான் அமைத்துக் கொள்ள வேண்டும். புதன் வாசலை தவிர்க்க வேண்டும் .