வாஸ்துபடி வீட்டில் தலைவாசல்

 

--main-entrance-door-entry-doors
–main-entrance-door-entry-doors

நான்கு திசையில் எப்பகுதியில் வைத்தால் நன்மை மற்றும் தீமைகள் பற்றிய  விபரங்களை அறிவோம்.

வீட்டிற்கு வடக்கு வாசல் என்பது வடக்கு பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. வீட்டில் நடுபகுதியிலோ அல்லது மேற்கு சார்ந்து வருவது தவறு ஆகும். ஆனால் கிழக்கு மற்றும் மேற்கு நீளமாக வீடு இருக்கும் போது நமது பழந்தமிழர் வாசல் வைக்கும் முறையில் வைத்து கொள்ளலாம் தவறு கிடையாது. அவையல்லாமல் கிழக்கு சார்ந்து வரும்போது பல நன்மைகள் ஏற்படும்.  நடுபகுதியியோ அல்லது மேற்கு சார்ந்தோ வாசல்படி வரும் பட்சத்தில் என்றும் அந்த இல்லத்தில் கெடுதலான பலன்களே ஏற்படும். அதன் தாக்கம் அந்த வீட்டின்  ஆண்கள் மீது இருக்கும்.
வீட்டிற்கு கிழக்கு வாசல் என்பது கிழக்கு பகுதியில் வடக்கு சார்ந்து இருப்பது  சிறப்பு. இவை அல்லாது வடக்கு பகுதியில் ஒரு அறையினை ஏற்படுத்தி பழந்தமிழர் வாசல் வைக்கும் முறையில் நவகிரக அடிப்படையில் இரண்டு பாகம் தள்ளி அமைத்து கொடுப்பதில் தவறுகள் கிடையாது. முன்பு சொல்லிய முறையான வடகிழக்கு கிழக்கு பகுதியில் அமைக்கும் போது  பலவித நன்மைகள் அந்த வீட்டிற்கு ஏற்படும். தவறான வாசல் அமைப்புகள் மொத்த வீட்டிற்கு நடுப்பகுதியில் வருவதும் தெற்கு சார்ந்து வருவதும்  தவறு. இதன்காரணமாக அந்த வீட்டில் உள்ள பெண்கள் உடல்நிலை பாதிக்கப்படும் நிலை  ஏற்படும்.
 வீட்டிற்கு தெற்குவாசல் என்பது கிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். அதுவே கிழக்கு மற்றும் மேற்கு நீளமான வீடாக இருக்கும் போது,சமையல் அறைக்கு இடம் ஒதுக்கி வைப்பது நமது பழந்தமிழர் முறையில் நல்லது.தெற்கு வாசல் வைக்கும்போது அதற்கு நேர் வடக்கு பகுதியில் பின்வாசல் கட்டாயம் வேண்டும்.  அப்படி வைக்கும் போது வடக்கு வாசல் வீடாக இருந்தால் என்ன பலன்களை கொடுக்குமோ அதேஅமைப்பில் பலன் தரவல்லது. இந்த தெற்கு வாசல்கள்   நடுபகுதி அல்லது மேற்கு சார்ந்தோ வருவது மிகப்பெரிய தவறு. இதனால் பல பல கெடுதலான பலன்கள் அந்த வீட்டு பெண்களுக்குஏற்படும்.

best vastu for main door
best vastu for main door

 வீட்டிற்கு மேற்கு வாசல் என்பது வடக்கு சார்ந்து வருவதே சிறப்பை தரும்.  தெற்கு மற்றும் வடக்கு நீளமாக உள்ள வீட்டில் வடமேற்கில் தரைத்தள பால்கனி அமைப்பினை ஏற்படுத்தி வாசல் வைக்கும் போது நமது பழந்தமிழர் முறையும் இணைந்து நல்லது செய்யும். எக்காரணம் கொண்டும் மொத்த வீட்டில் நடுபகுதியோ அல்லது தெற்கு சார்ந்து வருவது மிக தவறு ஆகும். வடமேற்கு வாசல் வரும்போது  கட்டாயமாக கிழக்கு வாசல் இருக்க வேண்டும்.அப்படி கிழக்கு வாசல் வைக்கும்போது கிழக்கு வாசல் வீட்டில் என்ன நல்ல பலன் கிடைக்குமோ அதுபோல கிடைக்கும். அங்குள்ள தவறான வாசல் அமைப்பு அந்த வீட்டில் உள்ள ஆண்கள் மீதும் அவர்களின் தொழிலின் மீது பாதிப்பு ஏற்படுத்தும்.

 ஒவ்வொரு வீட்டிற்கும் தலைவாசல் என்பது சாலை அமைப்புக்கு தகுந்த மாதிரி திசைக்காட்டிக்கும் ஏற்ப மாறுபடும். அதனால் சாலைகள் கொஞ்சம் திசைக்கு சரியாக இல்லாமல் இருக்கும் போது அந்த திசையில் வரும் தலை வாசல் சரியான வாஸ்து நிபுணர் துணை கொண்டு மட்டுமே அமைக்க வேண்டும்.

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)