வாழ்க்கையில் மூன்று விசயங்கள்

உழைப்பு,நேர்மை வழி, நன்றி மனப்பான்மை, இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்கும் பொழுது அந்த மனிதர் ஆளுமை பெற்ற மனிதராக மாறி விடுகிறார். ற்போது உயர்ந்த நிலையில்  இருக்கும் 90சதவீத மனிதர்கள் அனைவருமே இந்த ஒரு வித்தையை கற்று வெற்றி பெற்றவர்கள் தான்.அவர்கள்  நன்றி சொல்ல  வில்லை என்றாலும்,  அவருடைய ஆழ்மனதில் இருக்கும் . ஒரு மேடைப்பேச்சு மனிதர் தொடங்குகிற போது வணக்கத்தோடு ஆரம்பித்து முடிகிறபோது  நன்றி வணக்கம் என்று முடிப்பார்.

அதேபோல நாட்டுக்காக கிரிக்கெட்  விளையாட்டு விளையாடும் வீரர் 50 ரன்கள் எடுத்த பிறகு விண்ணை பார்த்து வழங்குவார் . சக வீரர்களுக்கு நன்றி சொல்வார் .100 ரன்கள் எடுத்தபிறகு தரையைத் தொட்டு வணங்குவார். சகவீரர்களை கட்டி பிடித்துக் கொண்டு நன்றி கூறுவார். ஒரு முட்டையில் இருந்து வரக்கூடிய கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு, தள்ளி வந்த முட்டையை நின்று திரும்பிப் பார்க்கும். விவசாயிகள் விளைச்சலைத் தருகிற  நிலத்திற்கு வருடம் ஒரு தடவை பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் வருடம் ஒரு தடவை நன்றி சொல்ற நிகழ்வுகள்தான். கலையை கற்றுக் கொடுத்த குருவுக்கு, குரு பூர்ணிமா நாளில் நன்றி சொல்றாங்க என்னைப்போல இருக்கறவங்க. வளர்ந்த நாடுகளில்  நன்றி என்கிற விஷயத்தை பெரிய அளவில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

விமான பயணத்திற்கு பிறகு பைலட் மற்றும் அங்க இருக்கிற ஒர்க் பண்ற மக்களுக்கும், பேருந்து பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்சியில் பயணத்திற்கு பிறகு அந்த டிரைவருக்கு நம்ம வந்து நன்றிங்க விஷயத்தையும், ஹோட்டல்ல நமக்கு சப்ளை செய்கிற மனிதருக்கு ஒரு நன்றி என்கிற விஷயத்தையும், ரயில் பயணங்களில் கூட வர பயணிகளுக்கு ,மற்றும்  டிக்கெட் பரிசோதகர் மற்றும்,  உணவு பொருட்களை சப்ளை செய்யும் மக்களுக்கு நன்றி என்று விஷயத்தை சொல்ல வேண்டும்.  நன்றி உணர்வோடு ,நன்றி செய்கிற  எந்த செயலுமே வெற்றி செயல்தான். ஒருவரின் ஆளுமைப் பண்பை தலைமை இடத்திற்கு அழைத்துச் செல்கிற விஷயம் நன்றி.

ஒருவரை அடையாளம் காட்டுவதும் நன்றி என்கிற ஒற்றை சொல்.  சின்ன சின்ன உதவிகளுக்கு கூட இந்த ஒற்றைச் சொல்லை பயன்படுத்துகிற போது, நமக்கு ஒரு பெருமித தோற்றம்  பெறுகிறோம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மதற்கு.திருவள்ளுவ பெருமான்  வார்த்தைக்கு இணங்க, என்னன்றி கொண்டவரும் வெற்றி பெற்ற மனிதரே …..
நன்றி… t.you