வாழ்க்கைநிலைக் குறைபாடுகளும் வாஸ்துவும்,

வாழ்க்கைநிலைக் குறைபாடுகள்
வாழ்க்கைநிலைக் குறைபாடுகள்

வாஸ்துவில் ஸ்கிஜோஃப்ரெனியா நோய்க்கு தீர்வு உண்டா?

ஸ்கிஜோஃப்ரெனியா என்கின்ற நோய  ஒரு  மனக் குறைபாடு ஆகும். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பலவிதமான அசாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்: குரல்களைக் கேட்டல், சிதைந்த எண்ணங்கள் அல்லது, தவறாகப் புரிந்துகொள்ளுதல், விநோதமான நம்பிக்கைகள் போன்றவை. 
இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து வாஸ்து பார்க்க அழைத்தார். அப்படி அழைக்கும் போது ஐயா எங்கள் வீட்டில் பேய் உள்ளது. எங்களை தூங்க விடுவது கிடையாது மிகவும் சிரமப்பட்டு வாழ்கின்றேன் என்றார். நான் உடனே உங்கள் வீட்டில் தென் மேற்கு வாஸ்து  பிரச்சினை உள்ளது அதனை சரி செய்யும் போது  உங்கள் வீட்டில் உள்ள ஆவி ஓடிவிடும் என்று ஆலோசனை சொல்லி விட்டு வந்த பிறகு நான் சொன்ன விசயத்தை செய்தார்கள். அதன்பின் அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வில் வரவில்லை.  ஆக இப்படி இவர்கள் நிறைய விஷயங்களைக் கற்பனை செய்துகொள்வார்கள், எது நிஜம், எது கற்பனை என்று பிரித்துப்பார்க்கவே இவர்களால் இயலாது. இந்த விஷயங்கள் மற்றவர்களுக்குதான் அசாதாரணமானவை, ஆனால் அவர்களைப்பொறுத்தவரை இவை நிஜமாகவே தோன்றுகின்றன.இது முழுக்க வாஸ்துவில் தென் மேற்கு சம்பந்தப்பட்ட விசயம் ஆகும்.
இவ்வகை நோயின் அறிகுறிகளால், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் எதார்த்தத்தை வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள், மற்றவர்கள் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், மற்றும்  காயப்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று அவர்கள் ,எண்ணிக்கொண்டு  தன்னை பாதுகாத்துக்கொள்கிறேன் என்று ஒரு செயலை செய்வது இயல்பான வாழ்க்கை வாழும் மக்களுக்கு புரியாத புதிர் ஆகிவிடும். 
 உதாரணமாக, பக்கத்துவீட்டுக்காரர்கள் தன்னுடைய குடும்பத்தினரைக் கொல்லப்பார்க்கிறார்கள் அல்லது காயப்படுத்தப்பார்க்கிறார்கள் என்று அவர்கள் எண்ணலாம், அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எல்லாக் கதவுகள், ஜன்னல்களையும் எப்போதும் மூடியே வைக்கலாம்.

இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுடைய சில நம்பிக்கைகள் தவறானவை அல்லது அர்த்தமற்றவையாக இருக்கும். ஆனால், அதை நிரூபித்தபிறகும், அந்த நம்பிக்கைகள் தொடரும். உதாரணமாக, தனக்குத்தெரிந்த ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார், அல்லது, தனக்கு விஷம் தர முயற்சிசெய்கிறார் என்று சிலர் நினைக்கலாம்; தொலைபேசி வழியே ஒரு ரகசியக் குறியீடுமூலம் யாரோ தங்களுடன் பேச முயற்சிசெய்வதாக நினைக்கலாம். எல்லாரும் தன்னைப்பற்றிதான் பேசுகிறார்கள் என்று அவர் எண்ணலாம், எப்போதும் பிறர்மீது சந்தேகத்துடன் இருக்கலாம். அபூர்வமாகச் சில சமயங்களில், பாதிக்கப்பட்டவர் தன்னை ஒரு பிரபலமாகவோ, சரித்திரக் கதாபாத்திரமாகவோ எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

சிலநேரங்களில், பாதிக்கப்பட்டவரால் தெளிவாகச் சிந்திக்க இயலுவதில்லை. அவர்களுடைய பேச்சு தர்க்கரீதியில் இருக்காது, பொருந்தாமலிருக்கும், அல்லது, அவர்கள் விட்டுவிட்டுப்பேசுவதுபோல் தோன்றும். இதனால், சுற்றியுள்ளவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாது. இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வாக்கியத்தைப் பூர்த்தி செய்யாமலே நிறுத்திவிடலாம், இவர்களிடம் யாராவது எதையாவது கேட்டால், பொருந்தாத பதில்களைச் சொல்லலாம், 

 பாதிக்கப்பட்டவருடைய சிந்தனை குறைபட்டிருப்பதால், அவர்கள் எளிய வேலைகளை நீண்டநேரம் கவனித்துச் செய்வது சிரமம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்களால் கவனித்துக் கேட்க இயலாது, மற்றவர்கள் சர்வசாதாரணமாக நினைக்கிற எளிய, சாதாரணமான வேலைகளைக்கூட, இவர்கள் செய்ய மறந்துவிடலாம். இதனால், அலுவலகம் அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில் இவர்களுடைய செயல்திறன் குறைந்து விடும்.
பாதிக்கப்பட்டவர்கள் பிறருடன் நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம், இவர்கள் எப்போதும் தனியாக இருக்க விரும்பலாம். இவர்கள் உணர்ச்சியில்லாத, ஒரேமாதிரியான தொனியில் பேசலாம், அடிக்கடி ஒற்றைச்சொற்களைப் பயன்படுத்திப் பேசலாம், அவர்களுடைய முக உணர்ச்சிகள் முகமூடியைப்போல் காணப்படலாம், அவற்றில் எந்த உணர்ச்சியும் இருக்காது, அல்லது, மிகக்குறைந்த உணர்ச்சிகள்மட்டும் இருக்கும்.

ஸ்கிஜோஃப்ரெனியாவைக் கண்டறிகிற தனி பரிசோதனை என்று எதுவும் இல்லை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பலவிதமான அறிகுறிகள் காணப்படுவதால், மருத்துவநிபுணர் அவரை முழுமையாகப் பரிசோதித்தபிறகுதான் ஒரு தீர்மானத்துக்கு வருவார். இந்தப் பரிசோதனையின்போது, பாதிக்கப்பட்டவருடைய நடவடிக்கை மாற்றங்கள், உயிரியல் செயல்பாடுகளின் மாற்றங்கள் (தூக்கமின்மை, சாப்பிடுதல் அல்லது பிறருடன் பழகுதலில் ஆர்வமின்மை போன்றவை) ஆகியவற்றைக் கண்டறிய மனநல நிபுணர் முயற்சி செய்கிறார். பாதிக்கப்பட்டவருடைய உறவினர்கள் அல்லது அவரைக் கவனித்துக்கொள்கிறவர்களிடமும் மருத்துவ நிபுணர் பேசலாம், அதன்மூலம் அவருடைய நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் பலவும் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஒருமாதத்துக்கு வெளிப்பட்டிருந்தால்மட்டுமே அவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதாகக் கண்டறியப்படுகிறது.
உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. சில பழக்கங்களுக்கு அடிமையாதல், இருதுருவக் குறைபாடு மற்றும் மனச்சோர்வு போன்ற பிற மனநலக் குறைபாடுகளையும் ஸ்கிஜோஃப்ரெனியாவையும் சிலர் குழப்பிக்கொள்ள வாய்ப்புண்டு. காரணம், இந்த மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கும் மாயத்தோற்றங்கள், பிரமைகள் வரலாம், அவர்கள் சமூகத்திலிருந்து விலகியிருக்கலாம். ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருக்கிறதா, அல்லது வேறொரு மனநலப் பிரச்னை வந்திருக்கிறதா என்பதைத் துல
ஸ்கிஜோஃப்ரெனியாவை முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேசமயம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய வாழ்க்கையைச் சுதந்தரமாக வாழ்வதற்கு உதவும் சிகிச்சைகள் நிறைய உண்டு. ஸ்கிஜோஃப்ரெனியா என்பது, நீண்டநாள் தொடரக்கூடிய ஒரு பிரச்னை. நீரிழிவு, ரத்த அழுத்தம்போல, இதையும் கவனமாகக் கையாளவேண்டும்.
இந்தச் சிகிச்சையின் நோக்கம், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர் தன் செயல்களைச் செய்துகொண்டு ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுவதும்தான்.

Lifestyle disorders
Lifestyle disorders

பொதுவாக ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்குப்பேர் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள், இன்னொரு பங்குப்பேர் வழக்கமான நிலையைவிடக் குறைவான ஒரு நிலைக்குத் திரும்புவார்கள். அவர்களும் தங்கள் வாழ்க்கையை ஓரளவு சமாளித்துக்கொள்வார்கள். மீதமுள்ள ஒரு பங்குப்பேர் செயல்பாட்டுடன் வாழ்வதற்கு அவர்களுக்கு அதிக உதவி தேவைப்படும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார் என்று யாராலும் ஊகிக்க இயலாது. ஆகவே, இந்தப் பிரச்னையை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது. ஒரு வீட்டினை வாஸ்து அமைப்பில் மாற்றம் செய்யும் போது அந்த நோயும் மாற்றம் அடையும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)