வாகன விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு
விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு

விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு

இன்றைய காலகட்டத்தில் வாகனங்களின் அதிகமான வளர்ச்சியினால் பயணம் என்பது எளிதான விசயமாகி விட்டது.அதேசமயம் பயணம் என்பது அத்யாவசியமானதாக ஆகிவிட்டது.  

அப்படிப்பட்ட பயணங்களை பலவகைகளாக பிரிக்கலாம். அந்தவகையில் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி ஆன பொருளை கொண்டு செல்லக்கூடிய போக்குவரத்திற்காக பயன்படும் வாகனங்களும் உண்டு.அதேபோல குடும்பத்துடனும்,நண்பர்களுடனும்,இன்ப சுற்றுலா செல்லும் பயணமாகவும் இருக்கும். அடுத்து நாம் அன்றாடம் பணிகளுக்காக பயன்படுத்துகின்ற வாகனங்களும் உண்டு.இனிய நிகழ்வினில் ஒரு வகையாக திருமண அழைப்பிதழ் காரணமாக மூகூர்த்த நாட்களில் என்றுமே சாலைக்கு வராத வாகனங்கள் அன்று வரக்கூடிய வகையிலும் ஒரு பயணம் என்பது இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் ஒருவர் பயணம் என்பது விபத்தில்லாத இழப்புக்கள் இல்லாத பயணமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு வீடாக இருந்தாலும் சரி,ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி,வாஸ்து அமைப்பில் இருப்பதுநல்லது.

எனது வாஸ்துப் பயணத்தில் ஒரு தொழிற்சாலையை திறமையாக நடத்திய நிர்வாக அதிகாரி ஒருவர் விபத்தில் கண்டம் ஏற்பட்டு அவர் இல்லாத காரணத்தால் அநாத தொழிற்சாலையே நிர்வாக காரணங்களால் நலிவடைந்த வரலாற்று பயணங்களும் உண்டு. அதேபோல வியாபார பொருள்களை வாகனத்தில் ஏற்றி விற்பனை செய்து விட்டு வரும்போது அப்பொழுது ஓட்டுனரை மிரட்டி பணம் பறிபோன சம்பவ இடங்களில் வாஸ்து பார்த்த அனுபவங்களும் உண்டு.

Relationship to accident and vestu
Relationship to accident and vestu

வியாபாரத்தில் இது இருப்பது தான் என்று கூறினாலும், இதற்கு முழுக்க காரணம் அந்த தொழிற்சாலையின் வடமேற்கில் உள்ள சிறுதவறுகளும்,அந்த உரிமையாளரின் இல்லத்தில் உள்ள வாஸ்து குற்றங்களே ஆகும். ஒரு தொழிற்சாலையின் வடக்கு கட்டிடங்களை கட்டி தென்மேற்கு காலியாக இடங்களை விடும்போது சுமார் 14 வருடங்களுக்கு எந்தவித பாதிப்புகளையும் கொடுக்காமல் அதற்கு பிறகு அந்த தொழிற்சாலையின் ஆண்மக்கள் பலம் இழந்து அந்த வீட்டின் பெண்களின் கைகளுக்கு அந்த நிறுவனம் கைமாறிவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)

Relationship to accident and vestu
Relationship to accident and vestu