வட்ட வடிவ அமைப்பில் கட்டிட வாஸ்து

நண்பர்களுக்கு வணக்கம். ஒரு கட்டிடம் என்பது வட்ட வடிவ அமைப்பில் இருந்தால் அது வாஸ்துவின் ஆற்றல் இல்லாத இடமாக மாறிவிடும். ஜாதக கட்டம் என்பது கூட தென்னிந்தியாவில் சதுரத்தில் தான் இருக்கிறது. ஆனால் அதன் உண்மை நிலை என்பது ஒழுங்கற்றது தான்.அதுபோல வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய 8×8=64என்கிற ஆயாதி கணக்குகளை உபயோகித்து வந்ததும் தென்னிந்திய மக்கள் தான்.அதுபோல் அந்த பூமியும் சதுர அமைப்பிற்கு வராது. எங்கும் பரவி இருக்கிற பூமியின் சக்தியை ஒரு இடத்தில் அடக்க செய்து தருகிற கட்டிடம் வேண்டும்.

அந்த வகையில் அழகுக்காக வட்டவடிவ கட்டமைப்பு ஏற்படுத்தி இருந்தால் நிச்சயமாக அதில் மனிதர் குறைவாகத்தான் வசிப்பார்கள். அதிக மக்கள் வாழ வேண்டுமானால் அந்த இல்லத்தில் ஏற்கனவே வசிக்கும் மக்களின் கையில்தான் இருக்கிறது.அதற்கு பரிகாரம் என்று பார்த்தால் வாஸ்து பொருள் வைப்பது சரியாக இருக்காது.அதுசார்ந்த வட்டவடிவ அமைப்பு உள்ள இந்து ஆலயங்களை தேடிபிடித்தோ, அல்லது குதூப்மீனார் போன்ற முஸ்லிம் மக்களின் ஆலயங்களை நோக்கி போவதும் அங்கு வசிப்பவர்களை அடுத்த கட்டம் நகர்த்தும்.