வாஸ்து அமைப்பில் வீடு கட்டும் திசைகள்

Directions of house construction in Vastu
Directions of house construction in Vastu

ஒரு வீட்டில் நான்கு விதமான இராசி உள்ளவர்கள் இருக்கிறோம்.எந்த திசையில் வீடு கட்ட வேண்டும்?

ஒரு இல்லத்தில் அம்மா அப்பா மகள் மகன் என்று பலர் வசிக்க கூடிய ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இராசி வரக்கூடும். சில வீடுகளில் மட்டுமே ஒரே இராசி அமைப்பு இருவர்களுக்கு இருக்கும். ஒரு இராசியுடையவர்களே ஒரு வீட்டில் இருப்பார்கள். 
ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் நான்கு பேர்களுக்கும் தனித்தனி வாயில் வைக்க முடியுமா என்றால் கட்டாயமாக முடியாது.

 

ஒரு வீட்டின் குடும்பத்தலைவர் என்று சொல்லக்கூடிய தந்தையின் இராசிக்கோ அல்லது மகனின் ராசிக்கு பொறுந்தும் அமைப்பில்  வாசல் வைத்துக்கொள்ளுங்கள்.இல்லையெனில் சாலைகள் எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே வாயில் வைத்துக்கொள்ளுங்கள்.
 அல்லது பேரன்கள் இருந்தால் அவர்களின் ராசிக்கு தகுந்த படி வாயில் வைத்துக்கொள்ளுங்கள். 

 

ஒரு குடும்பத்தில்  மூன்று பேர்,நான்கு பேர் வசிக்க கூடிய வீட்டிலும்    எந்த திசையில் வாயில் வைப்பது என்பது குழப்பங்கள் இருக்கும்.
  உங்களுடைய வீட்டில் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த பஞ்சபூத சக்தியை பொருத்தவரை இந்த புவியில் மீது கட்டும்  கட்டிடம்  மிக மிக முக்கியமானது. இதில் எல்லோருக்கும் எல்லா திசைகளும் ஒத்து வரும் ஆனால் நீங்கள் வாயில் எப்படி வைக்கின்றீர்கள் என்பது முக்கியம்.
ஒரு வீடு எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதுதான் மிக முக்கியம். ஆக கட்ட கூடிய வீடு  என்பது வடக்கு திசை வீடு என்றால் என்றால் வடக்கு சுவரின் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் கிழக்கு பார்த்த வீடு என்றால்  கிழக்கு சுவரின் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் தெற்கு பார்த்த வீடு என்றால் தெற்கு சுவரின் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் மேற்கு பார்த்த வீடு என்றால்  மேற்கு சுவரின் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் வாஸ்து விதிகளின் படி உச்சவாசலாக வரும்.
தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீடுகளுக்கு மட்டும் தெற்கு மற்றும் மேற்கு வாயில் அமைக்கும் போது சர்வ எச்சரிக்கை உணர்வோடு அமைக்க வேண்டும். இந்த இடத்தில்

Basic-2Brules-2Bof-2Bconstructing-2Ba-2Bbuilding-2Baccording-2Bto-2Bvastu-1-720x360
Basic-2Brules-2Bof-2Bconstructing-2Ba-2Bbuilding-2Baccording-2Bto-2Bvastu-1-720×360

 அனுபவ அறிவுள்ள வாஸ்து நிபுணர் துணை கொண்டுசெய்வது நல்லது. இந்த இடத்தில் நமது பழந்தமிழர் அமைத்த வாஸ்து மனையடி பொறுந்தும் அமைப்பிலும் வாயில் வைக்கும் போது  இன்றைய வாஸ்து அமைப்பில் உச்சவாசல் என்று சொல்லக்கூடிய அமைப்பிலும் அமைக்கும் போது ஒரு நல்ல வாழ்க்கை  ஒரு வீட்டில் வாழ முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)