ராகு- கோமேதகம் கேது- வைடூர்யம்/Powerful Rahu & Ketu Gemstones

ராகு கேது இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று இடது பக்கம் போகலாம் என்று சொல்லும். ஒன்று வலதுபுறம் போகலாம் என்று சொல்லும். ஒன்று முன்னாடி போகலாம் என்று சொல்லும், ஒன்று பின்னாடி போகலாம் என்று சொல்லும். இந்த கிரகங்களின் தலை ஒன்றாகவும்,வால் ஒன்றாகவும் இரண்டு விதமாக இருக்கக் கூடிய கிரகங்கள்ஆகும். இந்த கிரகங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் ராகு என்பது பிரமாண்டமாக கொடுக்கும். கேது என்பது ரகசியமாக அதே பிரமாண்டத்தை கொடுக்கும்.ராகு என்பது தெரிந்து பிரமாண்டமாக இருக்கும்.கேது தெரியாது பிரமாண்டமாக ரகசியமாக வைத்திருக்கும் . அந்த வகையில் கேது என்ற கிரகத்திற்கு வைடூரியம்.ராகு என்ற கிரகத்திற்கு கோமேதகம். நவரத்தினங்கள் ஆக இருக்கின்றன. ஏற்கனவே நான் சொன்னமாதிரி பணம் சார்ந்த நிகழ்வுகளில் 2,4,6, 10 பாவங்களோடு இந்த இரண்டு கிரகத்தில்  எது தொடர்பு வைத்திருந்தாலும் அவர்கள் இந்த  இரு கிரகங்கள் இரத்தினத்தை உபயோகிக்கலாம். கேது வைடூரியம்.ராகு  கோமேதகம். திருமணம் நடக்கவேண்டும், குடும்ப உறவுகளின் மேன்மை வேண்டும், குழந்தை பிறப்பு வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், அதில் தடை இருக்கின்ற பட்சத்தில் ஏழாம் பாவத்தோடு இந்த கிரகங்கள் தொடர்பு கொள்ளும்பொழுது தாராளமாக கேது  தொடர்பு கொண்டால் வைடூரியமும், ராகு தொடர்பு கொண்டால் கோமேதகமும் தாராளமாக அணியலாம். இதனை தவிர  ராகு திசை நடந்தால், கேது தசை நடந்தால், ராகு புத்தி நடந்தால், கேது புத்தி நடந்தால் இந்த கற்களை உபயோகியுங்கள் என்று யாராவது சொன்னால் யோசித்து செயல்பட வேண்டும்.