மேற்கு பார்த்த மனை மற்றும் கடைகளில் செய்ய கூடிய பெரிய வாஸ்து தவறுகள்

மேற்கு பார்த்த மனை மற்றும் கடைகளில் செய்ய கூடிய பெரிய தவறுகள் என்னவென்றால், வீடு மற்றும் கடைகளின் உயரம் ரோடுகளைவிட அதிகமாக இருக்கும் அது மிகப்பெரிய தவறாகும். கடை கண்டிப்பாக #சதுரம் அல்லது #செவ்வகமாக தான் இருக்கவேண்டும்.
வடகிழக்குப் பகுதியில் எப்பொழுதும் எடை இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஹார்டுவேர் கடை இருக்கிறது என்றால் #தென்மேற்குப் பகுதியில் எடை அதிகமாக உயரமாக பொருள் வைக்க வேண்டும். தெற்கு பகுதியில் தென்மேற்கை விட குறைவாக பொருள் வைக்கலாம்,அதனைவிட மேற்க்குப் பகுதியில் தெற்கு விட குறைவாக பொருள் வைத்துக்கொள்ளலாம், இவ்வாறு நாம் #வாஸ்து முறைப்படி எடையை ஒவ்வொரு திசை பகுதிகளையும் சரியாக உபயோகிக்க வேண்டும்.