மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

மேற்கு பார்த்த மனைகளுக்கான வாஸ்து.

 

பணம் வாஸ்து இரகசியங்கள்
பணம் வாஸ்து இரகசியங்கள்

 

 

 

 

 

 

எல்லா திசையை பார்க்கும் மனைகளும் நல்ல மனைகளே,ஆனால் நமது மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.ஆனால் மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும் போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனையடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும்.

மேற்கு பார்த்த மனைகளை கட்டும் போது வருண பகவான் தனது அதிகாரத்தை பயன் படுத்துகிறார்.ஆகவே அத்திசையின் கடவுளை அனுசரித்து வீட்டை அமைக்கின்ற போது மழையை எப்படி வருணபகவான் வழங்குகிறாரோ அதுபோல அனைத்து போகங்களும் கிடைக்கின்ற வீடாக இருக்கும்.

மேற்கு பார்த்த மனைகளை அதிகபட்சமாக வியாபாரம் செய்யும் மக்களும் அரசியல் துறையில் இருபவர்களும் உபயோகபடுத்தும் போது மிக நல்ல பலன்களை அவர்களின் தொழில் மூலமாக பெற முடியும்.அதேபோல வாஸ்துவிற்கு அப்பார்பட்டு நமது பழந்தமிழ் கலையான ஆயாதிமனைபொருந்தம் அடிப்படையில், அதனை உட்புகுத்தி வீட்டினை வியாபாரம் செய்யும் மக்களுக்கு பசு மனையின் பொருத்தம் வருவது போலவும், அரசியல் மற்றும் அரசு சார்ந்த வேலையில் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவம் சார்ந்த பணிகளில் இருக்கின்ற மக்கள் சிம்ம மனையின் பொருத்த அடிப்படையில் இல்லத்தை அமைக்கின்ற போது எப்போதும் நன்மைகளே நடந்து அவர்கள் இருக்கின்ற துறையில் உயர்வு கிடைக்கும். அதனை விடுத்து புறா மனையாக அமைக்கும் போது அவர்களின் வளர்ச்சி என்பது இருப்பதுபோலவே இருக்கும். என்றும் பெரிய உயர்வை பார்க்க முடியாது.

வாஸ்து அமைப்பில் மேற்கு பார்த்த மனைகளை தேர்ந்தெடுக்கும் போது மனையில் இருந்து நீங்கள் சாலைக்கு இறங்கும்போது ,மேற்கு புறம் இறங்கி வடக்கு மட்டுமே பயணப்பட வேண்டும். அப்படி சாலைகள் இல்லையென்றால் அந்த மனையை தவிர்க்க வேண்டும். இந்த மனைகளை வீடு கட்ட உபயோகிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்கள் இருக்கும் அமைப்பினை ஏற்படுத்தி வீடு கட்ட வேண்டும். அப்படி கட்டகூடிய கட்டிடம் தென்கிழக்கும் வடமேற்கும் இடத்தின் தரை அமைப்பில் உடைபடாது கட்ட வேண்டும்.

மேற்கு பார்த்த மனைகளில் வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றி வீடு கட்டும் போது நல்ல பலன்களை கிழக்கு பார்த்த மனைகளை விட அற்புதமான ஐஸ்வரியங்களை வழங்கும் மனையாக இருக்கும். இதற்கு காரணம் மேற்கு பாகத்தில் ஒரு பகுதியை சனிபகவான் ஆட்சி செய்கிறார்கள். ஆகவே சனி கொடுத்தால் யார் தடுக்க முடியும் என்கிற பழமொழிக்கு ஏற்ப அபரிமிதமான பலனை சனிபகவான் வழங்குவார். ஆகவே மேற்கு பார்த்த இடங்களை வாஸ்து மற்றும் ஆயாதி மற்றும் ஜோதிட அமைப்பின் படி சரியான முறையில் சாஸ்திரத்தில் உள்ள விதிகளை பின்பற்றி அமைக்கும் போது மேற்கு பார்த்த மனைகளே முதல்தரமான மனைகள் ஆகும்.