மூன்று மனிதர்கள்

உலகில் இருக்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் 1 வெற்றியாளர்கள்.

தனக்கு என்ன தேவை என்பதை முழுமையாக அறிந்தவர்கள். தனது ஆளுமைத் திறனையும், தனது செயலையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள்.

இரண்டாவது வகை   கேள்விகளால் ஏன் தோற்கிறோம் என்பதனை தெரிந்துகொண்ட இன்றைய தோல்வியாளர்கள்.
இவர்களை சுற்றியுள்ள சமூகம் சரியான சிலையாக இவர்களை செதுக்கி கொண்டிருக்கும்.

இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது வகை தோல்வியாளர்கள் ,நம்மில் பலர் இந்த வகை மனிதர்களாகத் தான் இருக்கின்றோம். அவர்களுக்கு தேவை சுற்றியுள்ள உறவு தரும் எழுச்சி, வெற்றி முனைப்பு காட்டும் நம்பிக்கை. அவர்களை இயக்கும் உத்வேகம். ஒரு மனிதன் வாழ்வில் தோல்வி அடைந்து விட்டால் அவர்களை அடுத்த கட்டத்திற்கு எழுப்பி ஓடவைக்க கணவனோ, அல்லது மனைவியோ, அல்லது மகனோ, அல்லது மகளோ மருமகளோ மருமகனோ, அல்லது அண்ணன் தம்பிகளோ, அல்ல சுற்றத்தார்கள் அல்லது நண்பர்களோ இதில் யாரோ ஒருவர் எழுந்து ஓட வைக்க ஓடும் கோட்டில் நிற்க வைக்க வேண்டும் .

அதாவது வெற்றியை ஒரு சிலர் தக்க வைத்துக் கொள்ளாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முறிந்த சில உறவுகளாலும், தொலைந்துவிட்ட வேலை வாய்ப்பு சார்ந்த விஷயத்திலும், பண நெருக்கடி சார்ந்த விஷயத்திலும், உற்சாகம் தராத உறவு சொந்தங்களும், திட்டமிடாத இலக்குகள் இருப்பதனாலும், இப்படி ஏதாவது ஒன்று வெற்றியை தடுத்து இருக்கக்கூடும்.அது ஏன்னவென்று பார்த்து தன்னைத்தானே சரிசெய்ய தெரிய வேண்டும்.  விமானத்தில் பயணம் செய்கிறோம். அதன் முதல் அறிவிப்பு என்ன?… ஆபத்துக்கள் வர வாய்ப்புள்ளது. சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்பதுதான். அதுபோல  தோல்வியை, ஆபத்தை தடுப்பதற்காக நம் கடந்த காலதோல்வியை மனதுக்குள் நிறுத்தி , நமக்குள் எழும் உத்வேகம் தான் காக்கும் நம்மை காக்கும் கவசம் ஆகும்.

நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உயர நினைக்கும் போது, இடையூறுகள் ஏற்பட்டாலும், பயணம் இனிமையாக அமைய தெளிந்த மனநிலை நம்பிக்கை என்னும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இவரால் இது முடியாத என்கிற முத்திரையை யாராவது குத்தும்போது, ஏன் முடியாது என்று  சிங்கம் போல சிலிர்த்து எழுந்து அந்த முத்திரையை உடைத்துக் காட்டி முன்னேறியவர்கள் தான் அடிப்படையில் சாதாரண சூழலில் வாழ்வைத் தொடங்கியவர்கள். ஆனால் அசாதாரணமான மன உறுதியுடன் வாழ்வை எதிர் கொண்டவர்கள் அதனால்தான் வென்றார்கள்.