முதல்தரமான வாஸ்து அமைப்பு

சமையலறை என்பது முதல்தரமான வாஸ்து அமைப்பு என்பது தென்கிழக்கு மட்டுமே பிரதானம். தெற்கு பார்த்த வீடுகளில் ஒரு சிலருக்கு தலை வாயிலில் வேண்டும் என்று கேட்பார்கள். அந்த இடத்தில் வடமேற்கு கொண்டு செல்லலாம். ஆனால் கழிவறைகளை பொருத்த அளவில் வடமேற்கு வருகின்ற படியால், வடமேற்கு சமையலறை அமைப்பது என்பது கடினம். இந்த இடத்தில் தெற்கு பார்த்த மனையாக இருந்தாலும் கூட, தென்கிழக்கில் அமைத்துக்கொண்டு பிரதான வாயில் கிழக்கு பகுதியில் அமைத்துக் கொள்ளலாம்.

சமையல் செய்வது என்று சொன்னாலே திசை திரும்பிய வீடுகளில் அடுப்பு வைப்பது சரியான திசையில் இருக்க வேண்டும்.  சமையலறையில் நீங்கள் குளிர்சாதன பெட்டியை வைக்கிறீர்கள் என்று சொன்னால் வட மேற்கு பகுதியிலும், சமையல் சார்ந்த சமைக்கும் பொருள்களை தெற்கு, தென் மேற்கு பகுதியிலும் வைத்துக்கொள்ளலாம். சமையலறை வாசல் என்பது மத்திய பாகத்தில்
அல்லது உச்சத்தில் இருக்கவேண்டும். எதிர்மறை இடங்களில் அதாவது நீச்ச பாகத்தில் வாயில்கள் இருக்கக் கூடாது. சமையலறை என்றாலே கண்டிப்பாக கதவு முக்கியம். ஏனென்றால் வடகிழக்கை பிரித்து விடுவதற்காக, சமையலறை அமைக்கும் போது மனையடி அளவாக வைத்துக் கொண்டால் மிகச் சரியான சமையல் அறையாக வரும் என்பது தின்னம்.