மாடிப்படிகள் ஏறுவது எப்படி

மாடிப்படிகள் ஏறுவது என்பது தெற்கு அல்லது மேற்கு திசை சிறப்பு தென் கிழக்கு பகுதியில் தெற்கு நோக்கி ஏறுவதும் சிறப்பு. வடமேற்கு பகுதியில் மேற்கு நோக்கி ஏறுவதும் சிறப்பு . கட்டிடத்தின் மத்திய பகுதியில் மாடிப்படி வருவது தவறு. எந்த இடமாக இருந்தாலும் தெற்கு மேற்கு திசை நோக்கி வருவது சிறப்பு. பிரதான வாயிலுக்கு நேராக மாடிப்படி இருப்பது கொஞ்சம் பார்த்து குற்றமே. வடகிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் மாடிப்படி வரக்கூடாது. தென்கிழக்குப் பகுதியில் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் மாடிப்படி ஏறுவது தவறு . மாடிப்படி எண்ணிக்கை பொருத்தளவில் சரியா தவறா என்றால், அது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முடிந்தால் அது தவறாக இருந்தாலும் கூட லாப நஷ்டக் கணக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள். ஆகவே ஒற்றைப்படையில் வருவது சிறப்பு. மாடிப்படிகள் மனம் போன போக்கில் அமைக்க வேண்டாம். வாஸ்து முறையுடன் வைக்க வேண்டும். கட்டிடத்தின் உள் பகுதியில் மாடிப்படி எந்த மூலையிலும் வரக்கூடாது . கட்டிடத்தின் முன் படி அமைக்கும் பொழுது மேற்கு சுவரை ஒட்டியும், தெற்கு சுவரை ஒட்டியும் அமைக்க வேண்டும்.