மனையடி சூட்சும ரகசியங்கள்

மனையடி சூட்சும ரகசியங்கள் வரிசையில் ஆறு அடி அளவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஆறடி அளவு மிகுந்த அதிர்ஷ்டம் உடையது. செல்வாக்கும் உண்டாகும். ஆதாரமான செலவுகளை கொடுக்கும். தவறான செலவுகளை கொடுக்காது. நன்றாக பெருகும் யோகமுண்டு. இந்த அளவுகளை ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய வீட்டின் குடோன் அளவாக பயன்படுத்தும் போது,அதாவது நவதானிய மளிகை பலசரக்கு அறைக்கு பயன்படுத்தும்போது மிகுந்த செல்வாக்கு அடையலாம். ஆனால் ஆறு என்பது கேரள முறைப்படி ஆகாது ஆகவே அந்த வகையில் ஒரு அங்குலம் இரண்டு அங்குலம் இளகி வைத்துக்கொள்ள வேண்டும்.