மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

கிழக்கு திசையில் இருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கு திசையில் இருந்து வரும் மின்காந்த சக்தியையும் வீட்டுக்குள்  நிலைநிருத்தும் அமைப்பே வாஸ்து.

 

  என்னைப்போல வாஸ்து தொழிலாக பார்க்கும் சிலர் ஆலயத்தின் வாஸ்து வேறு இல்லத்தின் வாஸ்து வேறு என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே! உண்மையாக சொன்னால் கோயிலில் இருந்துதான் வாஸ்து என்கிற விசயம் இல்லத்திற்கு மாறியது.

 

மிகவும் புராதணமான சிவபெருமான் ஆலயங்களுக்கு செல்லும் போது அந்த ஆலயம்  கிழக்குப் பார்த்த அமைப்பில் இருக்கும்.  ராஜகோபுரம் தாண்டி கோவிலுக்கு,உள்ளே நுழைந்தவுடன் இடது பக்க அக்னி மூலையில்  மடப் பள்ளி என்று சொல்லக்கூடிய இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் இடமாக ஒதுக்கீடு செய்திருப்பார்கள்.அங்கு கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள் உணவு சமைக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருப்பார்கள்.வீட்டிலும் பெண்கள்அது போலவே  கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும் என்று உறுவாக்கப்பட்டது.

 

அதுபோல கோயிலை சுற்றி வரும்போது  தென்மேற்கு மூலை என்று சொல்லகூடிய கன்னிமூலையில் வினாயக பெருமான் மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்த வண்ணம் உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர் ஆகவே கனமான மேல்நிலைத் தொட்டி, தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்.என்ற அமைப்பின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.

 

அடுத்து அமைந்துள்ளது முருகப்பெருமானின் வழிபாட்டு இடமாக அமைக்கப்பட்டு அங்கு முருகப்பெருமான் கிழக்கு பார்த்த நிலையில் வடமேற்கில் உள்ளார்.சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான் ஆவார். ஆகவே வடமேற்கு திசையில் காற்று வரும் அமைப்பில் மூடப்படாத அமைப்பாக திறந்த அமைப்பில் மாடிப்படி அமைக்க வேண்டும்.

 

அடுத்து இறைவனுக்கு அபிசேக தீர்த்தம் செல்லும் தொட்டி மற்றும்,தண்ணீர் விழுவது வடக்காக இருந்தாலும், வெளியேறுவது வடகிழக்குத் திசையில்தான் வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத் திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு திசையில் இருந்து வரும் மின்காந்த சக்தியை ஒரு இல்லத்தில் நிறுத்தி வைக்க முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஆகியவை அமைக்கலாம்.இந்தத் திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும் திசை ஆகும்.

 

 இல்லங்களில் மூலை பகுதிகளில் கழிவறை அமைக்க கூடாது.காரணம் அது தேவதைகளின் இருப்பிடம் ஆகும்.அது போல மனையின் நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது. அந்தப்பகுதியிலும் கழிவறை அமைப்பது தவறு. ஆக பிரம்ம ஸ்தானத்தில் எதுவும் வராத அமைப்பு ஏற்படுத்தி முக்கியத்துவம் கொடுங்கள். கழிவறைகளை வீட்டின் வடமேற்கு விட்டு அல்லது மேற்குப் பகுதியில் அமையுங்கள்.
வீட்டின் ஈசானியத்தை எவ்வளவு அதிகமாக திறப்பாக வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய சக்தியும்,மின்காந்த சக்தியும்ஒரு இல்லத்தில் நிலைநிருத்த முடியும்.அது வீட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் நல்லது. அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில் ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.

 

வீட்டின் வடகிழக்கில் வாசல் வைப்பது, வடக்கு, கிழக்குத் திசைகளில்,ஜன்னல் வைப்பது மிகவும் நல்லது.அதற்கு எதிராக உள்ள தென்மேற்கு மூலையான,கன்னி மூலையில்,பரண் அமைப்பது,கனமான பொருட்களை வைப்பது,

Vastu-Shastra-refersPooja-room
Vastu-Shastra-refersPooja-room

 பீரோ,பணம் வைப்புப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைப்பது இந்தக் காரணத்துக்காகவே.வடக்கு குபேரன் திசை எனவும் அங்கிருந்து செல்வம் வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும் திசையான தென்மேற்கில் பணப்பெட்டியை மூட சொல்லப்படுகிறது.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)