மனநிம்மதி தரும் வாஸ்து

வாஸ்து அமைப்பில் வீட்டின் உள்ளே அறை
வாஸ்து அமைப்பில் வீட்டின் உள்ளே அறை

 

 

 

 

 

உடல் ஆரோக்கியம் என்பதே மிகப்பெரிய செல்வம் என்று நமது சித்தர்களும் மகான்களும் கூறியுள்ளனர். அந்தவகையில் பாஸ்ட்புட்என்று சொல்லக்கூடிய மற்றும். நன ஜங்க் உணவுகளை உட்கொண்டால் அல்லது இரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்,நமது சித்தர்கள் சொன்ன கூற்று உங்களுக்கு பொய்யாகி போய்விடும். இருப்பினும், இது உண்மையே; நல்ல ஆரோக்கியம் இல்லாமல் அனைத்துமே மிகுதியானவையாகும்.
நாம் வாழும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை பொறுத்தும் நம் உடல்நல ஆரோக்கியம் அமையும். டென்ஷன், பகைமை அல்லது காண முடியாத பிரச்சனை போன்றவைகள் இருந்தால், இவைகளை போக்க வாஸ்து சாஸ்திரங்கள் உதவிடும். இங்கு நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான எளிமையான மற்றும் சிறப்பான வாஸ்து ஆலோசனைகளை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

படுக்கையில் தூங்கும் போது, உங்கள் தலை தெற்கை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வீட்டின் மத்திய பகுதியில் படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது. அதற்கு காரணம், வீட்டின் மைய பகுதி தான் பிரம்மஸ்தானம் ஆகும்.

தலைக்கு மேல் உள்ள பீம வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
நல்ல ஆரோக்கியத்திற்கு வீட்டிலுள்ள அக்னி பகுதி சமநிலையுடன் இருப்பது முக்கியமாகும். உங்கள் வீடு தெற்கு திசையை நோக்கியிருந்தால் அல்லது இத்திசையில் சரிவு இருந்தால், அல்லது வட கிழக்கு திசையை நோக்கி ஜெனரேட்டர் இருந்தால் அல்லது தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியிலான தண்ணீர் தொட்டி இருந்தால், உடல் நல பாதிப்பு வீட்டில் உள்ள பெண்களுக்கு ஏற்படும்.

அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிடுங்கள்.அல்லது அங்கு விளக்கு எப்போதும் எரியும் அமைப்பு ஏற்படுத்துங்கள்.
வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் காம்பவுண்ட் கதவுகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு நல்லெண்ணெய் விளக்கு எரிய விடுங்கள்.அங்கு உயிர் சக்தி கூடிவிடும்.