மகரராசி குரு பெயர்ச்சி | guru peyarchi | குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 chennai astro

guru peyarchi

மகர ராசி மக்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஒன்றாம் இடமான ஜென்ம ராசியில் இருந்த குரு, அதாவது ஜென்ம குருவாக இருந்தவர் , நீச குருவாக இருந்தவர், இரண்டாம் இடத்திற்கு செல்வது என்பது மிகுந்த நன்மையைச் செய்யும் குருவாக இருப்பார்.இந்த இடத்தில் எந்த விஷயத்தையும் கையில் எடுப்பதற்கு முன்பாக மிகவும் யோசித்து செய்யக்கூடிய மனிதர்களாக தற்போது மாறி இருப்பீர்கள். நன்மை, தீமைகளை தெரிந்து நீங்கள் இதன் காரணமாக வெற்றி என்பது உங்களுக்கு நிச்சயம். இதுவரையில் தோல்வி என்று இருந்து வந்த மனிதரான மகர ராசி மக்கள் எடுத்ததெல்லாம் வெற்றி என்கிற மனிதராக மாறி இனிமேல்  விடுவீர்கள். இதுவரையில் பணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தோல்வி கொடுத்துக் கொண்டிருந்த குரு இப்பொழுது தன ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ராசிக்கு 2-ஆம் இடத்திற்கு செல்வதன் காரணமாக, பணம் சார்ந்த நிகழ்வுகளில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.  பூர்வீகச் சொத்துக்கள் மூலமாக வெற்றி, லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு, மற்றும் வீட்டுமனைகள் வாங்க கூடிய யோகம் இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக உங்களுக்கு நடக்கும். கல்வி சார்ந்த நிகழ்வுகளில் பொது அறிவை வளர்த்துக் கொள்வது, ஒரு போட்டித்தேர்வுகளில் பங்கு பெறுகிற காலமாக இந்த காலம் இருக்கும். ஏனென்றால் நீங்கள் படித்தது மட்டுமே கேள்வியாக வரும். அதனால் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக இருக்கும். தொழில் ரீதியாக, வேலை ரீதியாக சிறப்பான நிலையை காணக்கூடிய மகரராசி மக்களாக இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும் . அரசு பணிக்கு காத்திருப்பது என்பது போய், வேலை பெறுகின்ற நேரமாக இது இருக்கும். வேலை இல்லாமல் அங்கும் இங்கும், அலைச்சலை சந்தித்த மக்கள், இன்று ஒரு இடத்தில் அமரக்கூடிய மனிதர்களாக இருப்பார்கள்.

பதவி உயர்வு, வெளிநாடு சார்ந்த வேலைவாய்ப்பு பலன், சுய தொழில் செய்கின்ற மக்கள் சீரான லாபத்தை பெறுகின்ற மனிதர்களாக மாறுவார்கள். அதேசமயம் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற மக்கள்  மிகுந்த லாபத்தை பெறுகின்ற மனிதராக இருப்பார்கள்.. அதிஅற்புதமான பலனைக் கொடுக்கக்கூடிய குரு பெயர்ச்சியாக இந்த குருவின் நிலை மகர ராசி மக்களுக்கு கிடைக்கும்.