பூஞ்சோலை மனிதர்கள்

திரைப்பட பாடல் ஆசிரியர்கள் நிறைய பாடல்களை எழுதி புகழ் பெறாத போனவர்களும் இருக்கிறார்கள். எழுதிய பாடல்கள் அனைத்துமே ஒரு சூப்பர் ஹிட் ஆன பாடல் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக வந்து பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் ஐயா அவர்களை உதாரணமாக கூற முடியும். ஒரு சிலர் நிறைய பாடல் எழுதி இருந்தாலும் வெளியில் தெரியாத மனிதர்களாக போய்விடுகிறார்கள்.

அதேபோல ஒரு சாகாவரம் பெற்றவர்கள் என்று சொன்னால் தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா,
பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல்  அதனினும் இலமே என்ற ஒரு அற்புதமான வரி வருகிறது. அந்த வகையில்  ஒருவருக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் ஒருவரை வானளாவப் புகழ்வதும் நம்மைவிட ஏதோ ஒருவகையில் எளியோர் ஆக இருப்பவரை புல்லைப் போல பாவிப்பதும், நேரில் இல்லாதபோது மதிப்பு குறைந்த வார்த்தைகளால் பேசுவதும் நிறைய மனிதர்களுக்கு இருக்கக் கூடிய இயல்பு . ஒரு சில பெரியோர்கள் நடுத்தர மக்கள் மற்றும், சின்ன குழந்தையை கூப்பிட்டாலும் வாருங்கள், உட்காருங்கள். தம்பி நல்லா இருக்கீங்களா என்ற மரியாதையாகப் பேசுவார்கள். ஒரு சில சிறிய வயசு மக்கள்  பெரியவர்களை அந்த ஆள் வந்தான், அந்தாள் போனான்,கிழடு வந்தது போனது, என்கிற வார்த்தைகளால் பேசுவார்கள். வேலை செய்யக்கூடிய இடங்களில் ஓருசில மனிதர்கள் பேண் வேலையாட்களை, அந்த பொம்பள வந்துட்டாளா, அந்த பொம்பள போயிட்டாளா, என்று சொல்லக்கூடிய மேல் அதிகார மக்களும் இருக்கிறார்கள். ஆக இந்த  சில பழக்கவழக்கங்களை நம்முடைய குழந்தைகளுக்கு நமது குடும்ப உறுப்பினர்களுக்கு நாம் சொல்லி  கொடுக்கும் மனிதர்களாக இருக்க வேண்டும்.

அதாவது பெரியோரை மதித்தல், மற்றவர்களை மரியாதையோடு அழைக்க வேண்டும் .மனிதனாக பார்க்கவேண்டும் money யை வைத்து மனிதர்களை எடை போடக்கூடாது.  நிறைய மக்கள் நம்முடைய வயசு விட கம்மியா இருக்குறவங்கள எடுபிடி வேலைக்கு பயன்படுத்துகிறோம். அந்த ஒரு சில பக்கங்களில் முடிந்த அளவு  நம்ம குழந்தைகளைத் தவிர நம்முடைய வேலைகளை வேறொரு இடத்தில் இருக்கும் பொழுது நாமே செய்து செய்து கொள்ளப் பழக வேண்டும். அதேபோல தெரியாது காலை மதிக்காது செருப்பை மிதித்தாலும் ஒரு மன்னிப்பு கேட்பது, ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறோம் நம்மை விட மூத்த பெரியவர்கள் வரும் போது அவர் பணக்கார பெரியவரா அல்லது, ஏழை பெரியவரா என பார்காது ஐயா உட்காருங்கள் என அன்பை காட்டி அமர வைக்க வேண்டும்.  இப்படி இருக்கிற மனிதர்கள் தான் பூமியை  ஒரு பூஞ்சோலையாக ஆக்குவார்கள். அதே சமயம் அவர்களுடைய வாழ்வும் பூஞ்சோலையாக மலரும்.