புதன் கிரகம் காரகம்

புதன் என்கிற கிரகம் சூரியனுக்கு அருகில் முதல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் கிரகமாகும். சூரியனிடமிருந்து  அஞ்சு கோடி கிலோ மீட்டருக்கும் மேலான தூரத்தில் இருக்கின்ற கிரகம் புதன். தன்னைத்தானே சுற்றி சூரியனையும் 88 நாட்களில் சுற்றி வருகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் புதன் மட்டுமே. சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் , மற்ற கிரகங்களை விட விரைவாக சுற்றி வந்துவிடும். அந்த விஷயத்தின் அடிப்படைகள் தான் , இதனை சுறுசுறுப்பு கூறிய கிரகம் என்று சொல்கின்றோம். இளைஞர்களும், குழந்தை பருவத்தில் உள்ள மக்கள், சுறுசுறுப்பாக இருக்க மக்கள், அனைவருமே புதனின் காரகம். புத்திசாலிகள், சமயோசித சிந்தனை,  எந்த செயலையும் விரைவாக செய்பவர்கள், புதனின் காரணமாகும்.  எதிரிகளை வளர்த்துக் கொள்ளாத மனிதர்கள், எப்பொழுதும் நடுநிலையோடு இருப்பார்கள்.

சமாதானம், நடுநிலை போன்ற விஷயங்களுக்கு புதன் கிரகம் காரகம்.  கணிதம், புள்ளிவிபரம், காவியம், சிற்பக்கலை, ஜோதிடம்,  புத்தகம், ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவை பெருக்கிக் கொள்ளும் மக்கள்,ஆக அனைத்தும் புதனின் அம்சமாகும். கவிஞர்கள், சகலகலா கல்வி கற்றவர்கள், பல துறைகளில் அறிவு,பழமொழி கற்றவர்கள், ஒரு விஷயத்தை சரியாக திட்டமிட்டு செய்யும் மக்கள், ஜனரஞ்சக திறமையுள்ளவர்கள், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துபவர்கள்,  சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துபவர்கள், சமயோசித புத்தியை எல்லா இடங்களிலும் செய்யப்படுபவர்கள், புதுமையை விரும்பும் மக்கள், வியாபாரிகள், தூதுவர்கள், தசாவதானி, அஸ்டவதானி, தரகு வேலை செய்பவர்கள், புரோக்கர்கள் ,  தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி , பத்திரிக்கை, கணனி, புத்தகம் போக்குவரத்து, போன்றவற்றிற்கு காரகம் புதன், நரம்பு மண்டலம், உணர்வுகள், புத்தகம், உறவுமுறைகளில் தாய்மாமன், பெண் கொடுத்தல் வாங்கல், உறவுகளில் புதன் காரகம். சமாதானம், திட்டமிடுதல், பொதுஅறிவு, தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்த வேலை , நிபுணத்துவ வேலை, இளவரசு பட்டம், பல குரலில் பேசும் திறன், விகடகவி, பசுமை நிறம், பச்சை நிறம் ஒருவேளையை இரண்டு முறை செய்தல், பிரதிநிதிக,ள் நுட்பமான ஆராய்ச்சி, நகைச்சுவைகள், வளைந்து கொடுக்கும் தன்மை. இலக்கணப் புலமை. உலோகங்களில் பித்தளை, போன்றவற்றுக்கு புதனே காரகம், ஒருவர் ஜாதகத்தில் புதன் ஏழாம் பாவ தொடர்பு கொண்டு, 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது, மிகப் பெரிய வியாபாரியாக இருப்பார்கள். மிகப்பெரிய செல்வந்தர் நிலையிலும், ஒரு மிகப்பெரிய அளவில் பிஸினஸ் செய்யும் மக்களாக இருப்பார்கள். அதே புதன் 8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, தாய்மாமன், உறவு , கல்வி நிலையில்  பாதிப்பு,நுட்பமான அறிவு,  வியாபாரம்  வாழ்க்கையில் செய்ய முடியாது. அதே புதன் 1,3,7,11 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்போது கல்வி துறை,  தரகு சார்ந்த வியாபாரம்,  நடைமுறை வாழ்க்கையில் சராசரி மனிதர்களாக இருப்பார்கள். அதே புதன் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, ஒரு பெரிய அளவில் வியாபாரம் செய்யும் மக்களாக அனைத்தையும் சமயோசிதமாக செய்யும் மக்களாக இருக்க மாட்டார்கள். வருவது வரட்டும், போவது போகட்டும் என்று இருக்கக்கூடிய மனிதர்களாக இருப்பார்கள்.