பிடிவாதம் பிடிக்கிற குழந்தைகள்

சில இல்லங்களில் குழந்தைகளோட பிடிவாதத்தை பொறுக்க முடியாது ஒரு சில அப்பா அம்மாக்கள் கஷ்டப்படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிற குழந்தைகள் செயற்கை வழியில் வைக்கும் செடிகளைப் போல மாறிவிடுகின்றனர். மனித வாழ்வில் பிடிவாதம் என்பது வேறு, வைராக்கியமாக இருப்பது என்பது வேறு. கத்தியே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று பாம்பிடம் மாற்றிக் கொள்கிறது தவளை. வைராக்கியத்தோடு பொறுமையாக இருந்து தனது இரையை  பெருகிறது முதலை.ஆக சின்ன நோக்கத்திற்காக போராடுவது பிடிவாதம். உயர்ந்த நோக்கத்திற்காக போராடுவது வைராக்கியம்.

ஹிட்லரிடம் இருந்தது பிடிவாதம். ஸ்டாலின் வசம் இருந்தது வைராக்கியம். உலக வரலாற்றில் அழிவை நோக்கி பயணித்தவர்கள் பிடிவாதம் ஆனவர்கள். வைராக்கியத்தை நோக்கி பயணித்தவர்கள் வெற்றியாளர்கள்.

பிடிவாதம் பிடிக்கிற மக்கள் பலரும் இருக்கின்றனர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு தாக நினைத்து விடுகிறதே அது போல இருக்கின்றனர். சமுத்திர பிடிவாதம் புயல். கருமேகங்களின் பிடிவாதம் மின்னல். வழுத்த காற்றின் பிடிவாதம் சூறாவளி. நினைத்தது உடனே நடக்க வேண்டும், கேட்டது உடனே கிடைக்க வேண்டும் என்று வாழ்கிற மக்களின் வாழ்வில் நுனி இழையை கொடுத்து முழு இலையை பிடுங்கி விடுகிறது இயற்கை.

எதிர்கால  ஏமாற்றத்திற்கு தற்போது ஏனி  வைத்திருக்கிறார்கள் பிடிவாதகாரர்கள். வெளிச்சத்தை நோக்கி வருகின்ற விட்டில் பூச்சி விரைவில் எரிந்து விடுகின்றன. பிடிவாதம் பிடிக்கிற மக்கள் வாழ்வின் சுவையை இழந்து விடுகின்றனர்.நிமிர்ந்து உள்ள மரங்கள் வலுவாக வீசும் காற்றில் காணாமல் போய்விடும் .வலைந்துபோகும் நானல் நிமிர்ந்து விடுகின்றன. அடம் பிடிப்பது சுற்றி இருக்கும் உறவுகளை அழித்துவிடும். பிடிவாதம் இல்லாது வாழ வாழத் தொடங்குவோம். அனுசரித்துச் செல்லும் ஆறு கடல்வரை நடைபெறுவதைப் போல, அனுசரித்து போகாத நதியின் வெள்ளம் பல இடங்களில் பரவி விடுகிறது.கடல் என்கிற இலக்கு நோக்கி பயணப்படுவதில்லை. அதுபோல பிடிவாதம் இன்றி வாழ்வோம். இலக்கை நோக்கி பயணிப்போம்.