சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா,

சங்கமேஸ்வரர் ஆலயம்
சங்கமேஸ்வரர் ஆலயம்

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

பாடல்பெற்றகொங்கு 7 தளங்களில் முக்கியதளமாக பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார்.  பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் பெரிய பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக இந்த ஆலயம் விளங்குகிறது. 
அம்மை

சங்கமேஸ்வரர் ஆலயம்
சங்கமேஸ்வரர் ஆலயம்

வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.
தட்சிணப்பிரயாகை’ என அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் குளித்தெழுந்தால் தோஷங்கள் நீங்கும் என்பதும் காலங்காலமாக இந்துக்கள் நம்பி வருகின்றனர். காவிரிக் கரையோரத்தில் உள்ள 1200ஆண்டுகள் பழமை என்பது கூடுதல் சிறப்பு. திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம் என்பதும் கூடுதல் சிறப்பு.

    

     

sangameswarar temple bhavani
sangameswarar temple bhavani

  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர் தனிதன்மை! புவிசார்ந்த குறியீடுகளால் தொழில், கலை, பாரம்பரியம் என அந்த ஊரும், சுற்றியுள்ள பகுதிகளும் உலகப் புகழ்பெறுகின்றன.
 இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)

கூடுத்துறை பவானி & காவிரி நதிகளின் சங்கமம்
கூடுத்துறை பவானி & காவிரி நதிகளின் சங்கமம்