பயணத்தில் பழக்கங்கள்

பல இடங்களுக்கு நாம்  பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பரந்து விரிந்த கடற்கரைகள், மிகப்பெரிய பிரமாண்டமாக இருக்கக்கூடிய கோயில்கள், சிறப்பு மிகுந்த சிற்பங்கள் என பல கலைச் சின்னங்களை  பார்க்கிறோ.ம் கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும் போது, ஒரு சுகத்தை அங்கு இருப்பவர்களும் பெற வேண்டாமா?.. நாம் சாப்பிட்ட கடலை தோல் எண்ணெய் காகிதம், குப்பை கூளங்கள் போன்ற விஷயங்களை கலைப்பொக்கிஷம் உள்ள இடங்களில் குப்பைகள் ஆக மாற்றுவது மிகப்பெரிய தவறு.

இதனால் எறும்புகளும் ஈக்களும் ஒரு சில பூஞ்சை தாக்குதல்களும் அந்த இடத்தை அசுத்தப்படுத்தி விடுகின்றன. பலர் போட்ட தீப்பண்டங்களின் மிச்சங்கள் தமிழகத்தில் கலைச் சின்னங்கள் இருக்கக்கூடிய இடங்களில் அதன் இடத்தில் அமைப்பை மாற்றி விடுகிறது. புனிதத் தளங்கள் என்று சொல்லிக்கொண்டு அந்த இடத்தை அழுக்கு படுத்தும் மனம் உள்ள மனிதர்களுக்கு கடவுள் அருள் என்பது நிச்சயம் கிடைக்காது. கோயில்களில் தெப்பக்குளம் குப்பைத் தொட்டிகள் ஆனால் அதனை உறுவாக்கும் மனிதன் வாழ்க்கையும் ஒரு குப்பைத் தொட்டியாக மாறி விடும். அழகிய பூங்காக்கள் காகித சிதரல்களாக இருப்பது கொடும் செயல். எதையாவது திண்பதுதான்   ஆனந்தமான அனுபவம் என்று எழுதப்படாத சட்டம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

கடலை  ரசிப்பதை விட  கடலை கொறிப்பதுதான் அதிக ஆர்வம் மக்களுக்கு. எதுவாக இருந்தாலும் கலைச் சின்னங்கள், கடற்கரை மற்றும் ஆலயங்கள் அங்கு இருக்கக்கூடிய குப்பைகளை எடுப்பவர்கள் ஆக நாம் இருக்கவேண்டும்.  குப்பைகளை போடுகிற மனிதர்களாக இருக்கக்கூடாது. ஒரு சில கோயில்களில், ஒருசில கழிவறைகளில், ஒருசில சுவர்களில், கரிகொண்டு, வெள்ளை நிற சாக்பீஸ் கொண்டு, தங்கள் பெயர்களை எழுதி வைப்பதும் மிகப் பெரிய தவறு. நம்முடைய உடலில் ஒரு சின்ன கீறல் ஏற்பட்டால் பொங்கி எழுகிற மனிதன்,  கோயில்கள், சிற்பங்கள் பொது சுவர்கள் கழிவறைகள் போன்ற இடங்களில்  கரித்துண்டுகள் மூலம் ஒரு சில எண்களையும் பெயர் மற்றும் ஓவியம் வரைந்து வைக்கின்றார்கள். ஆக பொது இடங்களை நமது கண்களால் ரசிப்போம். சிதிலம் அடையாமல் பாதுகாப்போம். மற்றவர்கள் அந்த செயலை செய்தால் கண்டிப்பாக தவறு எங்கு நடக்கிறதோ தட்டிக் கேட்கும் மனிதராக மாறும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து செயல்களும் தட்டிக் கேட்காது நடக்கும். இதுவும் ஒரு வெற்றிக்குரிய வழிதான். ஒரு பொது இடத்தில் ஒருவர் அசிங்கம் செய்கிறார் என்று சொன்னால், நம்ம இடம் இல்லையே என்று கேட்காமல் சென்றால் நமக்கு வர வேண்டிய விஷயங்களை பிரபஞ்சமும் இயற்கையும் தடுக்கும். நன்றி வணக்கம்

பயணம் பற்றிய கட்டுரை, பயணம் எத்தனை வகைப்படும், பயணம் திரைப்படம், பயணம் என்றால் என்ன, பயணம் கனவு பலன், பயணம் செய்வது போல் கனவு, பயணம் கட்டுரை, பயணம் வேறு சொல், பயணம் meaning in english, பயணம் கவிதை, பயணம் செய்வது போல் கனவு கண்டால், mk stalin, coronavirus news, coronavirus chennai, news headlines, durga stalin, tamil news, coronavirus lockdown, coronavirus update, corona virus