படுக்கை அறையை  வாஸ்து அமைப்பில் சுத்தப்படுத்துதல் எப்படி?

Bedroom__vastu
Bedroom__vastu

படுக்கை அறை வாஸ்து சுத்திகரிப்பு

படுக்கை அறை என்பதே ஒரு மனிதன் அதிக நேரம் வீட்டில் இருக்கக்கூடிய இடம் ஆகும்.ஏனென்றால் வேலை செய்ய வெளியே போய்விடும் நேரம், உணவு உண்ணும் நேரம்,குளித்த பின்னர் தன்னை தயார் செய்து கொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அதிக நேரம் இருக்கும் இடமே படுக்கையறை ஆகும்.

இந்த இடத்தில் எப்படி யோகா வாழ்க்கையில் உடலை பஞ்சசுத்தி செய்து உடலினை ஒரு நேர்மறையாக வைத்து கொள்கின்றோமோ,அதுபோல படுக்கையறையை ஒரு அதிர்வுகள் உள்ள இடங்களாக வைத்து கொள்ள வேண்டும். சரியாக சொன்னால் அது படுக்கை அறை மட்டும் கிடையாது.அது பணம் வைக்கக்கூடிய, பணம் பெருக்க கூடிய இடம் ஆகும்.இந்த இடம் எனது வாஸ்து பயணத்தில்  பார்க்கின்ற போது பெரிய கவனிப்பு இல்லாமல் வைத்திருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்த இடத்தினையும் ஒரு புனிதத்தன்மை உள்ள இடமாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு மனிதன் வாழ்வு அனைத்து விசயங்களிலும் வெற்றி வேண்டும் என்றால் இந்தப்பகுதி சுத்தமாக எந்தவித குப்பைகளும் இல்லாமல், படுக்கைகள் நன்றாக அழகாக இருக்க வேண்டும் பணம் மற்றும் துணிமணிகள் வைக்கும் பெட்டிகள் நன்றாக அழகாக புதியனவாக இருக்க வேண்டும்.

 எப்படி ஒரு அழகான குழந்தையை பார்த்தால் எடுத்து கொஞ்ச வேண்டும் என்கின்ற எண்ணம் வருகிறதோ அதுபோல, நமக்கே ஒரு ஈர்ப்பு வர வேண்டும் அந்தப்படுக்கை அறைகளின் மேல்,

 அழகு என்பது ஆபத்து என்று சொன்னாலும்,படுக்கை அறைகள் என்றும் ஒழுங்காக அழகான அமைப்பில் இருக்க வேண்டும். தேவையான பொருள்கள் மட்டுமே அங்கு இருக்க வேண்டும். அந்த அறைக்கு சம்பந்தமில்லாத பொருள்கள் அங்கு வேண்டாம்.

vastu for south west bedroom
vastu for south west bedroom

அந்தவகையில் எப்படி தென்மேற்கு படுக்கை அறையினை புனிதப்படுத்துவது:

சில வாசனைப்பொருள்கள் மனதிற்கு சந்தோசம் கொடுத்து அமைதியை ஏற்படுத்தும்.சில வாசனை பொருட்கள் சிற்றின்ப செயல்களை தூண்டும்.அந்தவகையில் இந்தப் படூக்கை அறைகளுக்கு சில செயற்கை வாசனைதிரவியங்களோ,அல்லது இயற்கையான வாசமாக உள்ள மலர்களை வைத்து அந்த அறையை புனிதப்படுத்த முடியும்.சந்தன தைலம் கொண்டு வாசனைப்படுத்தலாம். இந்த இடத்தில் ஒருவர் ஒரு மிகப்பெரிய வேலையை செய்யும் போது என்ன சொல்வார்கள் என்றால்,என்ன உனானை சந்தனகட்டை கொணாடா எரிப்பார்கள் என்றோ,மறைந்த முன்னால் பிரதமர் அன்னை இந்திரா மற்றும் ராஜுவ்காந்தி ஆகியோர்களை சந்தனகட்டை கொண்டே எரித்தனர். இந்த இடத்தில் மிகப்பெரிய மனிதர்களுக்கும்,பணக்காரர்களுக்கும், உரிய விசயம் ஆகும்.   

இந்த இடத்தில் பணத்தினை ஈர்க்கும் சூட்சும சக்தி சந்தன மரத்திற்கு உண்டு. அதன் காரணமாக அதனை சரியாக படுக்கை அறையினில் உபயோகித்து தென் மேற்கு படுக்கை அறையினை புனிதப்படுத்துங்கள்.

vastu_bedroom,படுக்கை அறை வாஸ்து
vastu_bedroom,படுக்கை அறை வாஸ்து

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA Gounder,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)