வாஸ்துப்படி படுக்கை அறை எங்கு வர வேண்டும்

படுக்கை அறை எங்கு வர வேண்டும் அதனால் ஏற்படும் நல்ல பலன்களும், தீய பலன்களையும் பற்றி  தெரிந்து கொள்வோம்.குடும்ப தலைவர் படுக்கும் படுக்கையறை எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில்தான் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த வீட்டில் அந்தபகுதி எடைகள் அதிகமாகி,அங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு பற்பல நல்லபலன்களை கொடுக்கும். ஆக ஒருவர் தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் உழைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் தென்மேற்கு படுக்கையறை வாஸ்துவில் சரியாக இருக்க வேண்டும். தொழிலில் வருமானம் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை கொடுப்பது தென்மேற்கு படுக்கையறை மட்டுமே.

தென்கிழக்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை வரனன இருப்பது தவறு. குறிப்பாக இளம் தம்பதியினரை இந்த பகுதியில் வரக்கூடிய படுக்கையறையில் படுக்கக்கூடாது.  இதனால் தம்பதிகள் இடையே ஒற்றுமை சீர்குலைந்து பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு மேலும் உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் குழந்தை பேறு என்பதுகூட தடை  ஏற்பட வாய்ப்புண்டு.

வீட்டில் வடகிழக்கு பகுதியில் குடும்ப தலைவர் படுக்கையறை  வருவதை தவிர்க்க வேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய அறையில் படிக்கும் குழந்தைகளை மட்டுமே தங்க வைப்பது சிறப்பை தரும். மேலும் படிப்பது மற்றும் யோகா சார்ந்த விசயங்களுக்கு  இந்த வடகிழக்கு அறையை பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் குடும்ப தலைவரின் படுக்கையறை கூடாது.

vastu for bedroom in tamil

வடமேற்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை இல்லாமல் இருப்பது நல்லது. இளம் தம்பதியினருக்கு இந்த வடமேற்கு பகுதியில் பெட்ரூம் ஒரே எச்சரிக்கை அடிப்படையில் தங்க வேண்டும். இந்த இடத்தில் வடமேற்கில்  இரண்டாவது படுக்கையறை அமைப்பதை ஒரு சரியான வாஸ்துவில் அனுபவம் உள்ள நிபுணரின் துணை கொண்டு அமைப்பதும் நல்லது. அப்படி அமையாத  பட்சத்தில் ஆண்கள் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாடு மற்றும்வெளிநாடு போக நேரிடும். கணவனுப் மனைவியும் அதிக நாட்கள் இருவரும் சேர்ந்திருப்பதற்கான வாய்ப்பே ஏற்படாது. இந்த பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை வரும் பட்சத்தில்  வேறு மனிதர்கள் தலையிடு சில நேரங்களில்  அந்த வீட்டில் ஏற்படும்.

vastu for bedroom in tamil
தென் மேற்கு படுக்கையறை என்பது ஆண்களுக்கு தொழில் மற்றும் வருமானம் உடல் நிலையில் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் பெயர் புகழ் இப்படி பலவிசயங்களை உள்ளடக்கியது ஆகும்.ஒரு வீடு கட்டும் போது   தமிழகம் எங்கும் பயணப்பட்டு  நல்ல அனுபவம் உள்ள வாஸ்து நிபுணரை ஆலோசனைக்கு வைத்து கொள்வது நல்லது.படுக்கை  அறையில் தாஜ்மஹால் படம் கூட வேண்டாம் அதுவும்சில எதிர்மறை விசயங்களை கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)