படுக்கையறை வாஸ்து

படுக்கையறை வாஸ்து என்று பார்க்கும் பொழுது ஒரு இல்லத்திற்கு தென்மேற்கு படுக்கை அறை மிக மிக முக்கியம் . அதன் பிறகுதான் மற்ற பகுதிகளில் வரவேண்டும். இரண்டாம் தலைமுறை அல்லது வாரிசுகளுக்கு தெற்கு சார்ந்த மையப்பகுதியில் படுக்கை அறை அமைத்து கொடுக்கலாம். அல்லது மேற்கு சார்ந்த மையப்பகுதியில் படுக்கையை அமைத்துக் கொள்ளலாம். அது போல தென் கிழக்கு பகுதியிலும், வட மேற்கு பகுதியிலும் தாராளமாக வரலாம் . படுக்கை அறை வரக்கூடாத பகுதிகள் என்று பார்க்கும்போது வடக்கு மையப் பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் ,வடக்கு பகுதியிலும் கண்டிப்பாக வரக்கூடாது. ஏற்கனவே நான் சொன்ன மாதிரி வடமேற்கு பகுதியில் படுக்கை அறை வந்தாலும் வடமேற்குப் பகுதி மூடப்பட்ட பகுதியாக இருக்கக் கூடாது. குடும்ப தலைவரின் படுக்கையறை என்பது தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். மாடிப் பகுதியில் படுக்கையறை அமைக்கும் பொழுது முதல் தரமாக தென்மேற்கு பகுதி. அதற்கு பிறகு தென்கிழக்கு.அதற்கு பிறகு வடமேற்கு பகுதி. இந்த மூன்று இடங்கள் மட்டுமே  மிக மிக சரியான இடம் ஆகும்.