நோய்களும் வாஸ்துவும் அதற்கு தீர்வுகளும்

medicine vastu
medicine vastu

நோய்களும் வாஸ்துவும்

மக்களின் வயது   ஐம்பது வயது வந்தாலே இல்லத்தின் வாசல் தேடிவந்து பல நோய்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றன என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் என்னால் அப்படி நினைக்க முடிவதில்லை.காரணம் எல்லாமே வீடு சார்ந்த விசயமாக பார்க்கிறேன்

      பழைய  நண்பரை வாஸ்து ரீதியான பயணத்தில்  சந்திக்கின்றேன். நான் ஏற்கனவே பார்த்ததற்கும் தற்போது பார்பதற்கும் அவரின் உருவத்தில் நிறைய மாற்றங்கள். அதனால் அவரின் உடல்நிலைபற்றி விசாரிக்கும் போது அவர் சொல்கிறார்  எனக்கு எந்தவித நோய்  தொந்தரவுகள் எல்லாம் கிடையாது. எப்பொழுதும் போலவே இப்போதும் அதிகாலை நான்கு முப்பது மணிக்கே  எழுந்து விடுகிறேன். யோகாசனம். பிரணாயாமம். தியானம் எல்லாம் வழக்கமாக செய்கிறேன். பீடி சிகரெட்,மது பழக்கமோ எதுவும் கிடையாது, என்று சொன்னார்.

   இந்த பூமியில் பிறந்த மனிதர்களின் கஷ்டங்களில் முதன்மையானது நோய் தான். பணம் சார்ந்த நிகழ்வுகளில் கஷ்டம் வந்தால் கூட முடிந்தவரை சமாளித்து பார்க்கலாம். அப்படியும் முடியாத போது எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளலாம்.  ஆனால் உடம்புக்கு நோய் என்று வந்துவிட்டால் இந்த  உடலை விட்டுவிட்டு எங்கே ஓடுவது, ஆகவே ஒரு மக்களின் பெரிய கஷ்டம் நோய்தான் என்று இதுவரை நம்பி வந்த நான் இந்த இடத்தில் மாறுபட்ட எண்ணம் எனக்கு ஆகிவிட்டது.
    கட்டு குலையாத மேனியை கூட கட்டுக்குலைய செய்துவிடும் தன்மை  நோய்க்கு உண்டு. ஆனால் இவரோ தனக்கு நோய் இல்லை என்கிறார். ஆனால் இவர் தண்ணீர் இல்லாத தென்னைமரமாக நிற்கிறார். அப்படியென்றால் இவருக்கு என்ன பிரச்சனை? அவரிடமே மீண்டும் கேட்டேன் உங்களது பழைய தோற்றம் முழுமையாக காணாமலேயே போய்விட்டது.
   ஆக ஒரு நோய் மட்டும் தான் மனிதனை உருகுலைக்கும் என்று இல்லை, உடல் நோயை விட கொடியது மனநோய்,  எனக்கு பணமில்லையே, பதவியில்லையே என்ற வருத்தம் கிடையாது. எனக்கென்று யாரும் இல்லையே என்ற கவலை தான் என்னை தின்று கொண்டு இருக்கிறது. பிறக்கும் போதே எந்த உடன்பிறந்த உறவுகள் இல்லாமல் பிறந்து இருந்தால் ஒன்றும் நமக்கு தெரிந்து இருக்காது. ஆனால் ஒருவர் வளமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் போது கூட இருக்கும் சொந்தங்கள் ஒவ்வொருவராக ஒருவரை விட்டு  பிரியும் துயரம் என்பது மிகக்கஷ்டம்.இதனை சாதாரண மனது கொண்டு ஒருவரால் தாங்கி கொள்ள முடியாது.

  இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் எல்லாமே ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும், அறிவுரை கூறுவதும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லுவதும் ஒருவருக்கு எளிதாக இருக்கிறது.ஆனால்  தானே அதனால் பாதிப்படையும் போது அதன்வலிகளும் வேதனைகளும் கொடூரமானவை ஆகும். 
     நான் பார்த்த நண்பரின் தந்தையாருக்கும் அவரின் அண்ணன்  தம்பிகளுக்குள், தோட்டம் சம்பந்தமான பிரச்சனை வெகுகாலமாகவே இருந்து வந்தது. கோர்ட் வாய்தா என்று அவரின் அப்பா எப்போதுமே அலைந்து கொண்டிருந்து ஒரு வழியாக 
  உறவினர்களில் நல்ல மனிதர்களின் சமதான முயற்சினால் அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு சரியாகவே கிடைத்து. அவரின் தகப்பனாரின் நெடு நாளைய கனவாக தோட்டத்தில் வீடுகட்டி வாழ வேண்டும் என்பதற்காக, கட்டிட பணி தொடங்கி, கட்டிட பணி அஸ்திவார அளவிற்கு பூர்த்தியான போது ஒரு நாள் இரவில் உறங்க போன அவரின் அப்பா காலையில் விழிக்காமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்த நோயும் அவருக்கு இல்லை. உடலை பரிசோதித்த மருத்துவர் திடிரென்ற ஏற்பட்ட ரத்த அழுத்தத்தால் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு  மரணத்தை தழுவிக் கொண்டார்.
 எதிர்பாராமல் ஏற்பட்ட மரணம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆக்கி விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்த போது ஆறுதல் சொல்லிய அவரின் அம்மா, உன்அப்பாவின் ஆசைப்படி  அப்பா தொடங்கிய வீட்டை கட்டி முடிக்கப்பார் என்று சொன்னார்கள். நின்று போயிருந்த வீட்டு வேலையை ஆறுமாதம் கழித்து மீண்டும் துவக்கினார். சுவர்கள் மேல் எழும்பி வீட்டின் மேல்தளம் போட வேண்டியது தான் பாக்கியாக இருந்தது. இந்த நேரத்தில் குளியலறைக்கு சென்ற அவரின் அம்மா வழுக்கி கீழே விழுந்து இடுப்பு எழும்பு ஒடிந்து படுத்த படுக்கையானர். அம்மா அனுபவித்த வேதனையோ அணு அணுவாக என்னை கொன்றது.  நான்கு மாதக்கணக்கில் படுக்கையில் இருந்து உடல் புண்ணாகி துளிதுளியாய் மரணத்தை தழுவினார்கள்.
  ஆக காலமானவர்கள் ஒருவர்  நடுத்தர வயதாகவும் ஒருவர் வயதானவராக இருந்தாலும் இத்தனை துயரங்களை வரிசையாக சந்தித்த பிறகும் எனது தகப்பனாரின் கடைசி ஆசையான அந்த வீட்டை கட்டி முடிக்கவே நான் விரும்புகிறேன். அதற்காக தான் உங்களை அழைத்தேன் என்றார்.

வீட்டுவேலையை  தொடங்குவதற்கு முன்பு வரை  வாஸ்து, ஜோதிடம்  என்பவைகளை நம்பியது இல்லை.வாழ்க்கையில் ஏற்பட்ட ஒவ்வொரு இழப்புகளையும் சந்தித்த பிறகு இந்த சாஸ்திரத்தில் உண்மையாயிருக்குமோ? என்று என்னிடம் வினவினார்.
  நமது முன்னோர்கள் நமக்கு வழங்கிய சாஸ்திரங்கள் எதுவுமே பொய் கிடையாது. நமது குறை உடைய அறிவால் அவற்றை படித்துவிட்டு உண்மையை உணர முடியாமல் அவைகள் எல்லாம் மூடநம்பிக்கை  என்று வீணாக பேசிக் கொண்டு இருக்கிறோம். வாஸ்து என்பதும், நல்ல புவி சார்ந்த அறிவியல் தான். வானத்தில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கு எப்படி ஈர்ப்பு சக்தி உண்டோ அதை போலவே பூமிக்கு உண்டு. பூமியின் உயிரோட்ட ஆதர்ஷனம் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்காக செல்கிறது. இந்த நிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல கட்டிடங்களை அமைத்து கொண்டால் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து ஓரளவு தப்பித்து கொள்ள முடியும்.

     நமது வாஸ்து சாஸ்திரத்திற்கு அறிவியல் ஆதாரம் ஏதாவது உண்டா?  என்று சிலர் கேட்கலாம். நமது உடம்பில் வெப்பம் எங்கிருந்து வருகிறது. ஒரு நமது உடலை ஒத்த விலங்குகளின் கறியை அசைவ உணவு என்ற பெயரில் எடுகாகின்றோமே அது எங்கே செரிமானம் ஆகி உடலை விட்டு கலிவுகளாக வெளியேறுகிறதே அது எப்படி என்பதனை காட்ட முடியுமா? அது போலத்தான்.
 

why_family_medicine for vastu
why_family_medicine for vastu

அப்படி ஒதுக்கினால் கெடுதி ஏற்படுவது யாருக்கு? நிச்சயம் நமக்கு தான், விஞ்ஞான  உலகம் என்பது கண் முன்னால் உருவமாக தெரிகின்றதை மட்டுமே ஏற்று கொள்ளும், மற்றவைகளை ஏற்று கொள்ளாது. அதற்காக அவை பொய்யென ஆகிவிடாது. வாஸ்து என்பதும் அப்படி தான் அதனால் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.ஆக உங்கள் நேரப் காரணமாக ஒரு தவறான வீட்டில் இருந்த காரணமாக ஒரு நல்ல வீட்டுக்கு செல்ல கால தாமதப்படுத்தி உள்ளது என்று சொல்வதை விட ஒரு நல்ல வீடு கிடைப்பதற்கு பல இழப்புக்கள் பெற்ற பிறகு நல்ல வீட்டுக்கு செல்லும் யோகத்தை கொடுத்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த மாதிரியான ஒரு சிரமத்திற்கு ஆளாகவில்லை எனில் ஒரு நல்ல வீட்டுக்கு செல்ல என்னை அழைத்திருக்க  மாட்டீர்கள். அதனால் அந்த பாக்கியத்தை கொடுத்த உங்களின் பெற்றோர்களே தெய்வங்கள் அவர்கள் தங்களின் உயிரை கொடுத்து உங்களை வாழ வைக்கின்றார்கள்.கட்டாயம் நான் சொல்லும் வாஸ்து அமைப்பில் உங்கள் இல்லத்தினை அமைத்து சீரும் சிறப்போடும் வாழ்வீர்கள் என்ற வார்த்தைகளை சொல்லி விட்டு வந்தேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)