நனவாகும் கனவு இல்லம் : 9

plaster of paris in house
plaster of paris in house

இன்றைய நனவாகும் கனவு இல்லம் தலைப்பில் வெளிப்பூச்சுக்கள் பற்றி பார்க்கலாம். பொதுவான விதிப்படி 1:6 விகிதத்தில் மணல் மற்றும் சிமெண்ட் கலந்து பூச வேண்டும். பூச்சு கனம் ஒரு அங்குலம் இருக்க வேண்டும். பூச்சை தொடங்கும் போதே ஒரே மட்டம் கிடைக்க, ஓடுகள் ஒட்டி பூசத் தொடங்க வேண்டும்.

பூசும் போது நன்றாக அழுத்தி பூச வேண்டும். வெளிப்புற பூச்சிற்கு ஸ்பாஞ்ச் அடித்தால்,சொர சொர என்று சிறிய மணல் மேலே எழுந்து  சில்வெடிப்புகள் கட்டிடத்தில் வராது.அதே சமயத்தில் வெளியே மழை வெயில் தாங்கும் அமைப்பாக இருக்கும்.

பூசுவதை கட்டிடம் கட்டிய பிறகு நாற்பத்தி ஐந்து நாட்கள் கழித்து பூசினால் சிறப்பு. வெளிப்பூச்சுக்கள் பூசும் போது சன்சைடு அல்லது பால்கனியில் ஒரு பார்டர் அமைப்பை ஏற்படுத்துவது நல்லது.ஏனென்றால் மழை பெய்யும் போது தண்ணீர் உள்ளே வராது.

நனவாகும் கனவு இல்லம்
நனவாகும் கனவு இல்லம்

சீலிங் பூச்சு வேலைகள்

வுட்டின் உள் கான்கிரீட் பூசுவதே  ceiling plastering 1 :4 ஏன்ற விகிதத்தில் சிமெண்ட் மணல் கலவைகளை எடுத்துகொள்ள வேண்டும்.இதைப்பூசுவது சிறிது சிரமம் என்பதால் வழுவழுப்பாக வேண்டும் என்றால் கரண்டி கொண்டு தேய்த்து விடவேண்டும். சொரசொரப்பாக இருக்க வேண்டும் என்றால், ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்து விடுதல் நலம்.இந்த பூச்சு என்பது வாஸ்து அமைப்பில் தென்மேற்கு அறைகள் உயரம் குறைவாகவும்,வடகிழக்கில் உயரம் அதிகமாக இருக்க வேண்டும்.

உள்பூச்சுகள்

இது எப்பொழுதும் வழவழப்பான அமைப்பாக இருப்பது சிறப்பு. இதன் கலவை 1:6 இருக்க வேண்டும்.இதற்கு பிறகு பட்டி என்று சொல்லக்கூடிய plaster of parris வேலைகளை பார்த்தாலும் சிறப்பு.

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்

ARUKKANI.A.JAGANNATHA Gounder,

(சூட்சும வாஸ்து நிபுணர்)

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,

தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com

www.chennaivastu.com

www.suriyavasthu.com

www.bannarivastu.com

E-mail:

[email protected]

Contact:

+91 83000 21122

+91 99650 21122.(whatsapp)