நனவாகும் கனவு இல்லம் : 4

house sunshade
house sunshade,நனவாகும் கனவு இல்லம்

 

கனவு இல்லம்

இதற்கு முந்தைய பதிவினில் 7அடி மட்டம் வரையில் செங்கல் கட்டுமானம் கட்டி முடித்து விட்டோம்.இனி 7 மட்டத்தில் பீம் அமைக்க வேண்டும். இந்த பீம் பொதுவாக எங்கு ஜன்னல்கள், கதவுகள், கப்போர்டு, ஷோகேஸ் , வருகின்றதோ அங்கெல்லாம் அமைக்க வேண்டும்.

இதன் அமைப்பு என்பது ஜன்னல் மற்றும் கதவுகளின் மேல் எங்கெல்லாம் திறவைகள் உள்ளதோ,அதற்கு மேல் செங்கல் வைத்து கட்டிடம் கட்டும் போது அந்த எடைகளை தாங்கும் சூல்நிலைக்காக கட்டப்படுகிறது.

ஆனால் தற்காலத்தில் எந்த இடத்திலும் விடாமல் போடுகின்றனர்.இது கட்டிடத்தின் நிலைத்தன்மைக்கு துணைபுரியும். பழைய வீடுகளில் இப்படி அமைத்த வீடுகளில் மட்டுமே நான் வாஸ்து பயணமாக செல்லும் போது.வாயில் கதவுகள் தவறாக இருந்தால் மாற்றி வைக்கும் சூல்நிலை அமையும்.இல்லையெனில் சிரமமாக போய்விடும்.

சிலர் கட்லிண்டன் அமைப்பார்கள் கதவு  ஜன்னல் இருபுறங்களிலும் பக்கத்தில் முக்கால் அடிக்கு bearing அதாவது மிதிக்கும் அமைப்பை கொடுப்பார்கள். உதாரணமாக 5 அடி அகலம் ஜன்னல் இருக்கிறது என்றால் அதற்கு மேல் போடக்கூடிய கான்கிரீட் 6.5அடி இருக்க வேண்டும். இதன் கனம் 6 அங்குலம் இருக்க வேண்டும். இதன் கம்பி அளவு பார்த்தோம் என்றால்,ரிங் என்று சொல்லக்கூடிய கம்பி 6 mm,8mmஉபயோகிக்க வேண்டும். நெடுக்காக வரும் கம்பிகள் 8 mm,10 mm,உபயோகிக்க வேண்டும். இந்த இடத்தில் வெளிப்புற படிஅமைப்பு என்பது இந்த பீம் மேல் தான் உட்காரும்.அதனால்இந்த பீம் மட்டும்20 mm கம்மிகளை 4 எண்ணிக்கை அல்லது 25 mm நான்கு உபயோகிக்க வேண்டும். இதன் நீளம் 6 அடிகள் வெளிபுறம் தொங்கும் அமைப்பாக சுவரின் உட்புறம் 12அடிகள் உள்ளே செல்ல வேண்டும். இந்த இடத்தில் மட்டும் பீம் அதிகபட்சமாக12 இஞ்ச் அளவில் இருப்பது சிறப்பு.இது வாஸ்துவில் மிகமுக்கியமாக கருதப்படுகிறது இதில் தவறு செய்தால் வீட்டின் வாஸ்து பலன்களே மாறிவிடும்.

நனவாகும் கனவு இல்லம்

இந்த இடத்தில் இந்த லின்டல் லெவல் பீம் கூடவே sun shade என்று சொல்லக்கூடிய அமைப்பின் கான்கிரீட் கூடவே அமைத்து கொள்ள வேண்டும். இந்த சன்சேடு அமைப்பு என்பது நமது வாஸ்து அமைப்பினில் என்றும் கிடையாது. இதனை அமைக்கும் போது என்னைப் பொறுத்தவரை ஒரு சின்ன குற்றம்தான்,

வீட்டின் உட்புற லாப்ட் என்பதனையோ, வெளிப்புற சன்ஷேடு என்பதனையோ நான் ஏற்கனவே சொன்னமாதிரி வெளிநாட்டில் யாரும் அமைப்பது இல்லை. ஆனால் இது நமது ஊரில் பழக்கம் ஆகிவிட்டது. லின்டல் லெவல் பீம் போடும்போதே சன்ஷேடு என்று சொல்லுகின்ற ஜன்னலின் வெளிப்புற கான்கிரீட் மற்றும், உட்புற மேற்கு மற்றும் தெற்கு புற கான்கிரீட் சிலாப் போட்டு கொள்ள வேண்டும்.இதனை வாஸ்து அமைப்பாக கிழக்கு வடக்கு சுவர்களில் அமைப்பது அதனை தொட்டுக்கொண்டு  இருப்பதும் தவறு ஆகும்.

இந்த லாப்டிற்கு உபயோக படுத்தும் கம்பிகள் மேல்புற மெயின் ராடு 8 mm அல்லது10 mm  ஆக இருக்க வேண்டும்.டிஸ்டிரிப்யூட்டர் கம்பியானது அதாவது வெளிப்புற குருக்கு கம்பி 6mm அல்லது8 mm ஆக இருத்தல் வேண்டும்.

இதற்கு பிறகு தொடர்ந்து பத்து அடிவரை தாரளமாக சுவர் எழுப்பி செல்ல வேண்டும். இநாத இடங்களில் இரண்டு விசயங்களில் வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். ஒன்று வீடு கண்திறப்பு சம்பந்தப்பட்ட ஒருவிசயம் மற்றொன்று கழிவறைகளின் வென்டிலேட்டர் அமைப்பு மிகச்சரியான இடத்தில் அந்த கழிவறைக்கு உச்சபகுதியில் அமைப்பதற்கான அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் அடுத்த பதிவில் கான்கிரீட் விபரங்களை தெரிவிக்கின்றேன்.

மேலும் விபரங்களுக்கு,

 வித்வான் ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)