நனவாகும் கனவு இல்லம் 1௦

modiji
modiji

கனவு இல்லம்

இதற்கு முன்பு உள்ள கட்டுரைகளில் வீடு தொடக்கம் முதல் சுவர்களின் உள் மற்றும் வெளி சுவர்களின் பூச்சு வேலைகளைப் பார்த்தோம் இந்தக் கட்டுரையில் பாக்கி உள்ள ஒருசில வேலைகளைப் பற்றி  விளக்கம் அளித்து  க்கட்டுரையை நிறைவு செய்வோம்.

தரைத்தளம் டைல்ஸ் ஒட்டும் போது தென்மேற்கு உயர்ந்த அமைப்பில் அமைக்க வேண்டும் அதற்கு பிறகு தென்கிழக்கு பகுதிகளில் உயர அமைப்பும்,அதன்பின் வடமேற்கில் தாழ்வு அமைப்பு உறுவாக்கி எல்லா இடங்களையும் விட வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாக உறுவாக்கி விடவேண்டும்.இந்த இடத்தில் தென்மேற்கு மற்றும் தெற்கு சமையல் வடமேற்கு விருந்தினர் படுக்கை அறைகளை அதனதன் மட்டமாக நிறுத்துவதற்கு அரிவால் நிலவில் அடிப்பகுதி இருப்பது நல்லது. இருந்தால் அதன் அளவு உயரத்தை அதோடு நிறுத்தி விடலாம். இல்லையென்றால் டைல்ஸ் ஒட்டும்போது திகட்டல் வருகிறது என்பார்கள் நீங்கள் சொல்லும் அமைப்பில் டைல்ஸ் ஒட்டமுடியாது என்பார்கள்.

அடுத்த அமைப்பாக சமையல் அறைக்கும், கழிவறைகளுக்கும், டைல்ஸ் ஒட்டி விடுவது நல்லது. கழிவறைகளின் டைல்ஸ் கீழே தண்ணீர் படும் இடங்களில் சோப்பு தண்ணீர் பட்டு பட்டு உப்பு படிந்து விடும்.இதனால் அந்த டைல்ஸ் உப்பின் நிறத்தில் ஒட்டுவது நலம்.சமையல் அறைகளிலும் எண்ணெய் படும் இடங்களில் டைல்ஸ் கட்டாயம் ஒட்டி விடுவது நல்லது.

அடுத்ததாக வண்ணம் பூசுவது பற்றி பார்ப்போம். வெள்ளை சீமெண்ட் அடிப்பதற்கு முன்பு நன்றாக தண்ணீர் விட்டு அதன்பின்  வெள்ளை அடிப்பது நல்லது.

அதன்பின் ஒரு மழைக்காலம் மற்றும் ஒரு கோடை காலம் கடந்த பின்னர் வண்ணங்களை வீட்டின் சுவருக்கு அடிப்பது நல்லது .ஏனென்றால் எங்காவது கட்டாயம் வெடிப்புகள் இருக்கும். இதனால் அது சரியாகி விடும்.

வீட்டின் உள்பகுதியில் நன்றாக பட்டி பார்த்து மட்டமாக தேய்த்து விட்டு அதன்பின் ஒரு தடவை வெள்ளை சீமெண்ட் அடித்த பிறகு உங்களுக்கு தேவையான நிறங்களை அடிப்பது சாலச்சிறந்தது.

அடுத்த படியாக கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும்,வண்ணம் அடிக்கும் போது கட்டாயமாக மரத்தில் சில இடங்களில் பள்ளம் இருக்கும். மற்றும் இரு மரங்களை இணைக்கும் இடத்தில் ஒரு சிறிய இடைவெளி இருக்கும். இந்த இடங்களில் மக் வைத்து பட்டி பார்த்து அதன்பின் வண்ணங்களை அடிக்க வேண்டும். மரத்திற்கும் பட்டி பார்க்க வேண்டும். இதனால் வண்ணங்கள் குழி உள்ள இடத்தில் தேங்காது.

கனவு வீடுகள்
கனவு வீடுகள்

இதுவரை வீடு எப்படி அமைப்பது  பற்றி  பத்து கட்டுரைகள்  வழியாக தெரிந்து கொண்டோம். இறுதியாக வீட்டில் சுற்று சுவரின் அமைப்பினை தற்சமயம் பார்ப்போம். சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்டி கற்களை அடுக்கி அதன்பின் தரை மட்டத்தில்ஒரு பெல்ட் பீம் ஏற்படுத்தி அதன்மேல் காம்பவுண்ட் சுற்றுசுவர் கட்டும்போது இந்த சுவரில் வெடிப்புகள் வராது. மிகப்பெரிய காம்பவுண்ட் சுவர்கள் கட்டும் போது 60 அடிகளுக்கு இடையே 3 இன்ச் இடைவெளி விட்டு கட்டி விடவும்.ஆனால் அப்படியே விட்டால் வாஸ்து குற்றம் ஆகி விடும்.அதற்கு ஒரு வெடிக்காது இருக்கும் இரண்டு சுவர்களையும் இணைத்த அமைப்பாக ஒரு கட்டிட அமைப்பை உறுவாக்கி கொள்ள வேண்டும். இதுவரை நனவாகும் கனவு இல்லம் என்கிற ஒரு பத்து கட்டுரைகளாக உங்களுக்கு வழங்கினேன்.இக்கட்டுரைகள் உங்களுக்கு பயன்தரும் என்று நம்புகிறேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)