நடிகர் விவேக் அவர்கள்

நடிகர் #விவேக் சார் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப்பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்பட கலைஞர் என்கிற நடிப்பைத்தாண்டி தனக்கு ஆதரவு கொடுத்து வளர்த்த தமிழ் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வாழ்ந்த லட்சியவாதி என்கிற பட்டம் விவேக் சாருக்கு பொருத்தமானதாக இருக்கும்.

சின்னக்கலைவாணர் என்ற பெயர் வைத்தது அவரது சமூக அக்கறை, சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத அப்பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது

நான் அவரை ஒரு முறை சந்தித்தேன் என்கிற வகையில் வாஸ்துவை வைத்து காமெடியாக அவர் #பாளையத்துஅம்மன் என்கிற படத்தில் #ஜோதிடம் ,#வாஸ்து, #எண்கணிதம் #ஜெம்மாலஜி போன்ற விஷயங்களில் ஒருசிலர் செய்யும் ஏமாற்று மோசடி பற்றி சித்தரிக்கும் காமெடி என்பது எங்களைப் போல இருக்கும் #வாஸ்து_மனிதர்களை கிண்டல் செய்வது என்று எடுத்துக் கொள்ளாமல், தவறான மனிதர்களை மட்டும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த வகையில் கூடவே மம்பட்டி, கடப்பாரை கூடவே கூட்டமாக வந்து #வாஸ்துமாற்றத்தை செய்து கொடுப்பார். அவரின் உதவியாளராக வரும் ஒரு கமெடி நடிகர் சொல்லுவார் வீட்டு உரிமையாளர் வசம் சொல்லும் வார்த்தை என்னவெனில், சில இடங்களில் எங்கள் வாஸ்து நிபுணர் புல்டோசர் கூட கொண்டு வருவார் என்றும் காமெடியாக அந்த படத்தில் வசனம் இருக்கும். அதேபோல இந்த வாசலை மாற்றவேண்டும் வடக்கில் வாசல் இருக்கிறது மிகப்பெரிய தோஷம் இதை எடுத்து வேறு இடத்தில் வை உங்கள் என்று சொல்லுவார். அதற்கு ஒரு தொகையும், அன்னலட்சுமி இருக்கும் இடமான உணவருந்தும் இடத்தை மாற்ற வேண்டும் அதற்கு ஒரு தொகை, இந்த தூண் யார் இங்க வைத்தது என்று வீட்டுக்காரரிடம் கேட்பார்.அதற்கு வீட்டு உரிமையாளர் சொல்வார் கொத்தனார் என்று பதில்.அதற்கு விவேக் சொல்வார் கொத்தனாரோ, நாத்தனாரோ, இதை இடித்துவிடு என்பார் . இப்படி பல இடங்களில் பேசி கடைசியில் வீட்டு உரிமையாளரை வீட்டின் உள்ளே வைத்து சுவர் வைத்து அடைத்து விடுவார்கள். அந்த இடத்தில் ஜன்னல் வழியாக பணத்தைக் கொடுங்கள் என்று வாங்கி கொள்வார்கள். கம்பிக்கு வெளியே பணத்தை எண்ணுகிறீர்கள் என்று வீட்டு உரிமையாளர் கேட்க விவேக் சொல்வார் காமெடியாக கம்பிக்கு வெளியே இருந்து பணம் என்பது தவறு இல்லை.ஆனால் கம்பியை எண்ண கூடாது என்பார்.ஆக வீட்டில் இருகவெளியே வர வழி என்ன என்று வீட்டு உரிமையாளர் கேட்க அதற்கு விவேக் பகுத்தறிவு கருத்தாக சொல்லுவார் , அதில் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், நிறைய மனிதர்கள் வீடு இல்லாத பிளாட்பாரத்தில் வசிக்கிறார்கள். நீங்கள் பெரிய வீடு கட்டிக்கொண்டு ஒரு சில #போலிவாஸ்து மனிதர்கள் வசம் ஏமாந்து பணத்தை விரயம் செய்வீர்கள் என்று ஒரு காமெடியாக இந்தப் படம் இருக்கும். ஆக தவறான மனிதர்களிடம் பரிகார பொருட்களை வைத்து ஏமாற்று வேலை செய்யும் வாஸ்து நண்பர்களுக்கும் செல்லாமல் சொல்லும் செய்தியாக இருக்கும். நல்ல விஷயத்தை அது எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஒரு கிண்டல் கேளிக்கை காமெடியாக தவறுகளை சுட்டிக்காட்டும் மிகப்பெரிய மகா கலைஞனாக இருந்திருக்கிறார் என்பது உண்மை.ஆழ்ந்த இரங்கல்கள்.

பொதுவாழ்வில் தமிழக வரலாற்றில் மேடை நாடகம், திரைப்படம் மூலம் சிறந்தபகுத்தறிவு சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர் அவரது 48ம் அகவையில் மமரணத்தை தழுவ, சின்னக்கலைவாணர் விவேக் 59 வயதில் மரண தேவனிடம் சரணடைந்து உள்ளார்.

நமது முன்னால் ஜனாதிபதி #அப்துல்_கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட அவர் மரம் நடும் லட்சியத்தை உருவாக்கி அதற்காக பாடுபட்டு வந்தார். கலாம் அவர்கள் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தொடங்கினார். இதுவரை பல லட்சக்கணக்கில் அவரால் மரங்கள் நடப்பட்டு உள்ளன.

ActorVivek #Vivek #ripvivek #vivekmeme #விவேக் #abdulkalam #Cinemanews #TamilActor #tribute #tamilmintnews #tamilmintcinema

actor vivek latest news, actor vivek comedy, tamil actor vivek, vivek comedy, tamil actor vivek comedy, actor vivek comedy speech, actor vivek heart attack, actor vivek latest news in tamil, actor vivek funny interview, actor vivek latest speech, actor vivek in hospital, actor vivek speech, tamil actor vivek latest news, vivek heart attack, actor vivek vaccine, actor vivek news, actor vivek family photos, actor vivek comedies, actor vivek son, actor vivek, actor vivek interview, actor vivek health, actor vivek latest interview, actor vivek latest, actor vivek news today, comedy actor vivek news, actor vivek latest movie, actor vivek whatsapp status, actor vivek today news, actor vivek last speech, actor vivek passed away, actor vivek death news, actor vivek death reason, vivek death news tamil, tamil actor vivek death, vivek comedy whatsapp status, actor vivek latest update, actor vivek hospital news, actor vivek health status, comedian vivek, actor vivek family, vivek comedy scenes, vivek comedy status, vivek family photos, vivek whatsapp status, rip actor vivek, vivek actor family, vivek actor son, vivek actor tamil, vivek rip, vivek actor, விவேக் காலமானார், நடிகர் விவேக், விவேக் காலமானார் actor vivek, to actor vivek விவேக், விவேக் vivek actor,