தொழில் தொடங்க என்ன வேண்டும்.

 தொழிலும் தொழிற்ச்சாலையும்

vastu for industrial plot
vastu for industrial plot
சிறந்த படிப்பு – 10% அனுபவம் 30% பணம் 25% பேங்க் கடன் 25% தொழிலாளர்கள் அமைவது 10% இந்த வகையில் ஒரு சிறந்த வாஸ்து அமைப்புடன் கூடிய இடம் இருந்தால் ஒரு மிகச் சிறந்த தொழில் அதிபராக மாறமுடியும். அதற்கு அவரது இல்லமும், தொழிற்சாலையும், மிகச்சிறந்த வாஸ்து அமைப்புடன் இருக்க வேண்டும்.
 
தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் ஆகிய அனைத்தும் சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும். நான்கு மூலைகளும் 90 டிகிரி இருக்க வேண்டும். தரைதளம் தென்மேற்கு உயர்ந்தும், தென்கிழக்கு தாழ்ந்தும், பிறகு வடமேற்கு தாழ்ந்தும், அடுத்து வடகிழக்கு தாழ்ந்தும் இருக்க வேண்டும்.கட்டாயமாக ஆயாதி கணித அமைப்பில் கட்டிடம் இருக்கவேண்டும்.
 
காம்பவுண்ட் கதவுகள் உட்புறம் நீக்கும் அமைப்புடன் இருக்க வேண்டும். காம்பவுண்ட் தெற்கு மேற்கு உயரம் அதிகமாகவும், வடக்கு கிழக்கு உயரம் குறைவாகவும் அமைக்க வேண்டும். தண்ணீர் தொட்டி மிகுந்த உயரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
 
பூமியில் அமைக்கப்படும் தண்ணீர்; தொட்டி போர் கிணறு, மொத்த இடத்தின் வடகிழக்கு பகுதியில் வரவேண்டும். எக்காரணம் கொண்டும் நீர் வேறு இடத்தில் இருக்கிறது என்று போர் மாற்றி போடக்கூடாது.
 
தொழிற்சாலையின் தெற்கு மேற்கு பகுதியில் முக்கிய கட்டிடமான தென்மேற்கு பகுதியில் உயரம் செய்த அமைப்பில் முக்கிய இயந்திரங்களை அமைக்க வேண்டும்.
 
துணைக்கட்டிடங்கள் எனும் பொழுது கிழக்கு வடக்கு பகுதிகளில் அதன் நேர்கோட்டில் அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது முந்தய கட்டிடத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ இருப்பது போல் அமைக்கக் கூடாது. உள் அறைகள் சரியான அமைப்பில் அமைக்க வேண்டும். அதேபோல துணைக் கட்டிடத்திற்கும், தலைமைக் கட்டிடத்திற்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாகவும், துணைக்கட்டிடத்திற்கு கிழக்கும் வடக்கும் அதிக காலியிடமாக இருக்க வேண்டும்.
 
தெற்கு மேற்கு உள்ள காலியிடங்களில் உயரமான மரங்கள் வளர்த்துக் கொள்ளலாம். வடக்கும் கிழக்கும் உயர்ந்த மரங்கள் வேண்டாம்.
 
கழிவறை வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். கண்டிப்பாக வேறு பகுதியில் அமைத்துக் கொள்ளக்கூடாது.
 
அந்த கழிவறை தரையோடு தரையாக இருக்க வேண்டும். உயர்ந்தோ, தாழ்ந்தோ அமைப்பில் வரக்கூடாது.
 
பேக்கிங் டெலிவரி வடமேற்கு பகுதியில் வரவேண்டும். இயந்திரத்தின் எந்த பகுதியோ, பிளேட்பாரமோ வடக்கு கிழக்கு சுவர்களை தொடாமல் அமைக்க வேண்டும்.
 
தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டி வடக்கு காம்பவுண்ட் சுவரின் கிழக்கிலிருந்து பாதி பகுதிக்கு மேல் பகுதியில் அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது வடமேற்கு பகுதியில்.
 
எந்த கட்டிடமும் இடம், மனை, தொழிற்சாலைகள் திசை காட்டும் கருவிக்கு சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை தவிர்த்துவிட வேண்டும். இந்த இடத்தில் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

chennaivastu.com
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.