தெரு குத்துக்கள் வாஸ்து

மிகவும் நல்ல தெரு குத்துக்களாக கீழ்க்காணும் 2 தெருக்குத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.

  • வடக்கு சார்ந்த கிழக்கிலிருந்து மனை நோக்கி வரும் தெரு குத்துவும்
  • வடக்கிலிருந்து கிழக்கு சார்ந்த மனை நோக்கி வரும் தெரு குத்துவும்,

இதற்கு அடுத்தாற்போல் இந்த இரு தெருக்குத்துக்களையும் நல்ல தெருகுத்துக்களாக எடுத்துக் கொள்ளலாம்.

  • மேற்கிலிருந்து வடக்கு சார்ந்து நமது மனைநோக்கி வரக்கூடிய தெருகுத்துவும்
  • தெற்கிலிருந்து கிழக்கு சார்ந்து நமது மனைநோக்கி வரக்கூடிய தெருகுத்துவும்

ஆக இந்த நான்கு தெருகுத்துக்கள் மற்றும் தெரு தாக்கங்களை மிகச்சிறந்த தெருகுத்துக்கள் மற்றும் தெரு தாக்கங்களாக எடுத்துக் கொள்ளலாம். தவறான தெருக்குத்துக்கள் என்று சொல்லும்பொழுது :

கீழ்க்காணும் நான்கு தெருக்குத்துக்கள் மிகவும் மோசமானவை ஆகும். அவை

  • மேற்கிலிருந்து தெற்கு சார்ந்து மனை நோக்கி வரும் தெருக்குத்தும்.
  • தெற்கிலிருந்து மேற்கு சார்ந்து நமது மனை நோக்கி வரும் தெருக்குத்தும்.
  • கிழக்கிலிருந்து தெற்கு சார்ந்து நமது மனை நோக்கி வரும் தெருக்குத்துவும்.
  • வடக்கிலிருந்து மேற்கு சார்ந்து நமது மனைநோக்கி வரும் தெருக்குத்துவும்.

ஆக இந்த நான்கு தெருகுத்துக்கள், தெரு தாக்கங்கள் நமது மனைக்கும், நமது தொழிற்சாலைகளுக்கும் தீங்கானவையாகும்