ஜோதிடர்களுக்கும் தெரியாத வாஸ்து உண்மை

தெரியாத வாஸ்து உண்மை

 

 

 

 

 

 

 

ஒருசில மக்கள் ஜோதிடர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக தெருகுத்துக்களை பெற்ற இல்லத்தை விட்டு வாஸ்து அமைப்பு கொஞ்சம் கூட இல்லாத வீட்டில் குடியேறி சிரமமாக வாழும் மனிதர்களின் வாழ்க்கையை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். வாஸ்து அமைப்பில் உள்ள பூர்வீக வீடு தென்மேற்கு இயற்கையாக மலைகள் மற்றும் வடகிழக்கு இயற்கையாக தாழ்வாக இருக்கும் அமைப்பிலும், இருக்கும் போது கட்டாயமாக எவ்விதமான தவறுகளையும் கொடுக்காது என்பது உண்மை. நல்ல வாஸ்து அமைப்பாக இருக்கும் பூர்வீக வீட்டை விட்டுவிட்டு வெளியே வேறு இல்லத்திற்கு போகும் போது அந்த இவ்லம் கண்டிப்பாக வாஸ்து மூலமாக நல்ல பலனை கொடுக்காது. இதனை எனது வாஸ்து பயணங்களில் பார்த்திருக்கிறேன்.

ஜோதிடர்களின் ஆலோசனை படி வீடு மாறுபவர்களுக்கும்அதனை சொன்ன ஜோதிடர்களுக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், பொதுவாக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தாது இருக்கவும், குழந்தை பிறப்பில் தடைகள் இருந்து அது விலக வேண்டும் என்பதற்காகவும், குறிப்பிட்ட வயது கடந்தும் திருமணம் ஆகாத காரணமாகவும், பணம் காரணமாக கடன் ஏற்பட்டு அதனால் பல சொத்துக்கள் இழந்த வாழ்க்கை கஷ்டம் நீங்கவும், இப்படி பலகாரணங்களால் வீடு மாறி சிரமமான வாழ்க்கை வாழுகின்றனர்.

எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த தகவலின் படி அதிகபட்ச மக்கள் பூர்வீக வீட்டில் எந்த தவறோடு வாழ்ந்து வந்தார்களோ அதே தவறோடு தான் வாடகை இல்லத்திலோ அல்லது சொந்தமாக மற்றொரு கட்டிய புதிய இல்லத்திலோ வாழ்ந்து வருகின்றார்கள் என்பது அதிர்ச்சிகரமான அதிசயத்தக்க விசயம்.