ஒரு மனையின் மூலைப்பகுதி குறைபாடு விளக்கம்.

மனையின் மூலைப்பகுதி குறைபாடு

Vasthu for Corner Plots
Vasthu for Corner Plots

 

 

 

 

 

 

 

ஒரு இல்லத்திலோ அல்லது ஒரு மனையின் இடத்திலோ,வடகிழக்கு பகுதி என்று சொல்லக்கூடிய இடம் இல்லாமல் போகும் போது,அந்த இடத்தில் செல்வாக்கு நிலையில் ஒரு தாக்குதல் இருக்கும். குழந்தைகள் சார்ந்த விசயத்தில் ஒரு சில தடங்கல்கள் இருக்கும். அப்படியே இருந்தாலும், புத்தியில் குறைபாடு மற்றும் உடல் சார்ந்த பாதிப்பை கொடுக்கும். இல்லையென்றால் அந்த இல்லத்தில் ஆண்கள் மட்டுமே வாழும் சூல்நிலையை ஏற்படுத்தி விடும்.

நைருதி மூலை இல்லாமல் இருப்பது தவறு ஆனால் பெரிய பாதிப்பு என்பது இருக்காது. ஆனால் அந்த இல்லத்தில் ஆண் வாரிசுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனாலும் நைருதி இல்லாமல் இருக்கக்கூடாது.

வாயுமூலை குறைவாக இருந்தால் பெண்களுக்கு ஒரு சில சிக்கல்கள் உறுவாகி விடும். ஆகவே குறையாமல் இருப்பது நல்லது.

அக்னி மூலை இல்லாது போகும் போது அந்த இல்லத்தின் பெண்களின் வாழ்வில் ஆண்கள் இல்லாது இருக்கும் நிலையை கொடுக்கும். அந்த வீட்டில் ஆண்கள் சிறப்பு இல்லாது டம்மியாக இருப்பார்கள்.

ஆகவே எந்த மூலையும் குறையாது இருப்பது நல்லது. அப்போது மட்டும் வாஸ்து என்பது ஒரு இல்லத்தில் பூர்ணமாகும்.