திருமண தடைக்கு காரணங்கள்

திருமண தடை பற்றிய விபரங்கள்

 

 

 

 

 

 

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த திருமணம் என்பது சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த தோஷங்களில் பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். மற்றும் தவிர ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகிய தோஷங்களால் திருமண தடைகள் ஏற்படுகின்றன.இதனையெல்லாம் கடந்து வாஸ்து ரீதியாகவும்,தவறுகள் இருக்கும் போது திருமண தடைகள் ஏற்படும்

ஜாதக அமைப்பில் திருமண தடைகளை கொடுப்பதில் செவ்வாய் தோஷம் முதன்மை வகிக்கிறது. ஜாதகத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷங்கள் ஏற்படும். திருமணத்திற்கு ஜாதக இணைப்பு என்பது 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே இணைக்க வேண்டும்.

ராகு – கேது தோஷம் எனும் போது, 7, இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதால் ஏழு எட்டு இடங்கள் பாதிக்கப்பட்ட சூல்நிலையை கொடுக்கிறது.

மாங்கல்ய தோஷம் என்பது இந்த தோஷம் பெண்களின் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், பிறந்த லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷம் மட்டுப்படும். 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷம் மட்டுப்படும்.

நான் பார்க்கும் kp சாரஜோதிடப்படி 7ம் பாவ கொடுப்பினை மற்றும் ஆணுக்கு சுக்கிரன் பெண்ணுக்கு செவ்வாய் கணக்கில் எடுத்துக்கொண்டும், வாஸ்து அமைப்பில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு வாஸ்து விதிகளுக்கு பொருந்தும் அமைப்பை ஏற்படுத்தும் போது மேற்கண்ட ஜாதக தவறுகள் பாதிக்கும் சூல்நிலையை கொடுக்காது.