தரைத்தள தண்ணீர் தொட்டி வாஸ்து

தரைத்தள தண்ணீர் தொட்டி என்கிற விஷயத்தில் வாஸ்து ரீதியாக அமைத்துக் கொள்வது நல்லது . அதாவது  அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க். அந்த தொட்டி என்பது எப்பொழுதும் வடகிழக்குப் பகுதியில் வரவேண்டும். இந்த பகுதி தவிர வடமேற்கு வந்தாலும் தவறு. தென்மேற்கு பகுதியில் வந்தாலும் தவறு. தென்கிழக்கு பகுதியில் வந்தாலும் தவறு. ஒரு சில மக்கள் சொல்வார்கள் வடக்கு மத்திய பாகத்திலும், கிழக்கு மத்திய பாகத்திலும், வருவதில் தவறில்லை என்பார்கள். என்னை பொறுத்த அளவில் வடகிழக்கு மட்டுமே வர வேண்டும். மற்ற இடங்களுக்கு தண்ணீர் தொட்டிக்கு வாய்ப்பு கிடையாது. அப்படி அமைக்கின்ற பொழுது மூலை  வெட்டு படாது, தண்ணீர் தொட்டியை அமைத்துக்கொள்ள வேண்டும்.