“உன்னை நீ நம்பு”

“உன்னை நீ நம்பு” நம்பியவர்கள் ஜெயித்தார்கள், ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Some tips to develop self-confidence.
Some tips to develop self-confidence.

 

 

 

 

 

இன்றைய இளைஞர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் திறமைகளும் இருந்தும் அவர்களால் வெற்றியாளர்களாக வாழ்விலே ஜெயிக்க முடிவதில்லை . இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தபோது பலர் போட்டியில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுவதில் ஆர்வம் அற்றவர்களாக இருப்பதும் அல்லது தோற்றுவிட்டால் என்னாகுமோ என்கிற அச்சத்துடன் இருப்பதும் தான் முக்கிய காரணமாக இருக்கிறது .

ஒவ்வொருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் இந்த இரண்டு காரணிகளுக்கும் அடிப்படை என்ன தெரியுமா நண்பர்களே “உங்களின் மீது உங்களுக்கு இருக்கும் குறைந்த நம்பிக்கையே ” ஆகும் .

உலகில் உள்ள அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான நபர் உசைன் போல்ட் . உலகின் அதிவேக மனிதராக அறியப்பட்ட அவர் நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக #தங்கம் வென்று சாதனை படைத்து கொண்டிருந்தார் . அவரோடு போட்டியில் ஓடினால் தங்கம் வெல்ல வாய்ப்பே இல்லை என அனைவரும் நம்பி வந்த காலம் .

லண்டனில் உலக சாம்பியன்ஷிப் 2017 தொடங்கியது . வழக்கம்போல 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் தொடங்கியது . மக்கள் ஆரவாரத்துடன் உசேன் போல்ட் தான் எப்படியும் வெல்வார் என்கிற நம்பிக்கையுடன் போட்டியை காண்கிறது . துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வீரர்கள் அனலாய் பறக்கிறார்கள் . 9 நொடியில் போட்டி முடிகிறது .

உசேன் போல்ட்டை வென்ற ஜஸ்டின்_கால்டின்

போட்டி தொடங்கும்போது இருந்த ஆராவாரம் போட்டி முடியும்போது இல்லாமல் அமைதியாகிப்போனது அரங்கம் . காரணம் நான்கு ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே பெற்றுவந்த உசேன் போல்ட்டை அமெரிக்காவின் ஜஸ்டின் கால்ட்டின் வென்று வரலாறு படைத்தார் . அடுத்த இடத்தை கோல்மன் பெற உசேன் மூன்றாம் இடம் பிடித்தார் .

நினைத்துப்பாருங்கள் நண்பர்களே தொடர் வெற்றிகளை பெற்றுவரும் உசேன் போல்ட்டை நம்மால் வெல்ல முடியாது என ஜஸ்டின் கால்ட்டின் நினைத்திருந்தால் ,அவர் மீது அவருக்கே நம்பிக்கையில்லாமல் போயிருந்தால் உசேன் போல்ட்டை வீழ்த்தி உலக சரித்திரம் படைத்திருக்க முடியுமா ?

யாரையும் வெல்ல என்னால் முடியும் என்று அவரை அவரே நம்பி முறையான பயிற்சிகளை மேற்கொண்டதால்தான் இந்த வெற்றியை அவரால் பெற முடிந்தது .

ஆகவே நீங்களும் வாழ்க்கையில் உங்களுக்கு சவாலாக இருப்பவர்களை கண்டு அஞ்சிடாமல் “உங்கள் மீது நம்பிக்கை வைத்து ” முயன்றால் இமயமும் உங்கள் காலடியில் இருக்கும் , வெற்றிகள் உங்கள் கரங்களில் தவழும் .

உசேன்_போல்ட்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது வெற்றியை இழந்த உசேன் போல்ட் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழக்காமல் 400 மீட்டர் ரிலே தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கம் வென்றார் .

100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வென்ற ஜஸ்டின் கால்ட்டின் உசேன் போல்டிற்கு தரையில் முட்டிப்பட அமர்ந்து மரியாதை செலுத்தினார் .

இந்த இருவருமே வெற்றி கனியை எட்டிப்பறித்தது அவர்களின் மீது அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் .

நீங்களும் உங்களை நம்பி வெற்றிநடை போடுவீர்கள் என நான் நம்புகின்றேன் .

தன்னம்பிக்கை மாதிரி மிகச்சிறந்த நண்பன் இந்த உலகத்திலேயே கிடையாது ஆதலால் இந்த நண்பனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிகள் உங்கள் பாதங்களில் முத்தமிடும்.