தனுசு ராசி குருபெயர்ச்சி பலன் 2021-2022 | guru peyarchi 2021 to 2022 in tamil dhanusu

தனுசு ராசி மக்களுக்கான குருபெயர்ச்சி பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். இதுவரையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் அதாவது, தன ஸ்தானத்திற்கு சாதகமாக அமர்ந்திருந்த குரு பகவான் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு செல்வது என்பது சற்று பணம் சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் சுமாரான பலன்களைக் கொடுக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். தனசு ராசி மக்களுக்கு இந்த இடத்தில் இந்த குருபெயர்ச்சி பலன்கள் என்பது 50சதவீதம் நல்ல பலன்களையும், 50% கெடுதலான பலன்களையும் கொடுக்கக்கூடிய ஒரு பெயர்ச்சியாக   கும்ப ராசிக்கு செல்கிற குரு உங்களுக்கு கொடுப்பார்.இந்த காலகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையை நீங்கள் சந்திப்பீர்கள். அதற்குப் பிறகு நண்பர்கள் உறவினர்கள் உதவியால் வெற்றி பெறுவீர்கள். இருந்தாலும் அந்த வெற்றி என்பது கொஞ்சம் கஷ்டப்பட்டு கிடைக்கிற வெற்றியாக இருக்கும்.

பொருளாதார ரீதியாக கொஞ்சம் சிரமம் கொடுத்தாலும், இரண்டாம் இடத்தில் இருந்தபோது குருபகவான் சேமித்து வைத்த பணத்தை தற்போது செலவு செய்கிற நிகழ்வாக இருக்கும். ஆகவே செலவுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது . சேமிப்பு என்பது உயரா விட்டாலும், வருமானம் என்பது குறையாமல் இருக்கும். வெளியில் கொடுத்த பணம் என்பது கொஞ்சம்வருவது இந்த காலகட்டத்தில் கடினமான செயல். வண்டி வாகனம், வீடு கட்ட நினைக்கிற மக்கள் இந்த கும்ப ராசி இல் குரு பகவான் இருக்கும் வரையில் தள்ளிப்போடுவது நல்லது. இந்த இடத்தில் இளைய சகோதரர்களின் உதவி என்பது இதுவரை பகையாக இருந்த இளைய சகோதரர்கள் என்பது கூட உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிற மக்களாக மாறிவிடுவார்கள். முக்கிய பணிகளுக்கு செல்லும்பொழுது உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகளை மற்றும் வாழ்க்கைத் துணையையும் அழைத்துச் செல்வது கூட நன்மையை கொடுக்கும். கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் படிப்பில் மந்தநிலை ஏற்படும். கலை சார்ந்த படிப்பு படிக்கும் மாணவ மாணவியர் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணிதம் மற்றும் அறிவியல் மருத்துவம் சார்ந்த படிக்கின்ற மாணவ மாணவிகள் கொஞ்சம் போராடி வெற்றி பெறக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும். உடல் சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எப்பொழுதுமே ஒரு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லை என்று சொன்னால், கால் வலி, கை வலி, உடல் வலி போன்ற தொந்தரவுகள் கண்டிப்பாக இந்த கும்ப ராசியில்  குருஇருக்கும் வரை கண்டிப்பாக கொடுப்பார். இந்த நேரத்தில் பணி ரீதியாக, வேலை ரீதியாக, வெளிநாடு சார்ந்த வேலை ரீதியாக, வெளி மாநிலம் சார்ந்த வேலை ரீதியாக, கொஞ்சம் இடமாற்றம் என்பது இருக்கும் . அதே நேரம் அலுவலகத்தில் கொஞ்சம் தனித்திறமையை நீங்கள் காட்டி செயல்படுத்தும் பொழுது, ஏற்கனவே எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை கிடைக்கும். வெளிநாடுகளில் நல்ல வருமானத்தில் இருந்த மக்கள், மீண்டும் அந்த வேலை நிறுவனம் சார்ந்த நிலை வழியாக சொந்த ஊருக்கு நாட்டுக்கு மாற்றம் நடக்கும் சூழ்நிலை கூட ஏற்படும். ஆகமொத்தம் இந்த குரு பெயர்ச்சி என்பது தனுசு ராசி மக்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த ஒரு பெயர்ச்சி என்பதாக இருக்கும் .

ஆனாலும் ஜென்ம ராமர் வனத்திலே

சீதையைச் சிறை வைத்ததும்,

தீதிலா தொரு மூன்றிலே

துரியோதனன் படை மாண்டதும், என்கிற புலிப்பாணி சித்தர் பாடலை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த குரு இடம் மாறுவது என்பது ஒரு மனிதனுக்கு பத்து சதவீத பலனை மட்டுமே கொடுக்கும். மீதி பலன் முழுமையாக ஜாதகத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி வணக்கம்.