தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளுக்கான வாஸ்து அமைப்புகள்.

vastu for lodge restaurant
vastu for lodge restaurant

hotels lodges,

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் கட்டுவது என்பது சாதரணமாக இன்று தொடங்கி நாளை முடியும் செயல் கிடையாது.இதனை வாஸ்து அமைப்பாக அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.லாட்ஜ் சார்ந்த கட்டிடங்களை கட்டும்போது அதிக கழிவறை அமைப்புடன் கூடிய குளியலறை சார்ந்து ஒவ்வொரு அறைகளையும் அமைக்க வேண்டும்.

 

அப்படி அமைக்கின்ற ஒவ்வொரு அறைகளையும் மிகச்சிறந்த வாஸ்துவில் பொருந்தும் அமைப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு அறைகளுக்கும் உச்ச வாசலை ஏற்படுத்த வேண்டும். கழிவறைகளை அமைக்கும் போது அந்த அறைகளின் வடமேற்கில் வருகின்ற அமைப்பாக அமைக்க வேண்டும். சில தங்கும் விடுதிகளில்,வடகிழக்கில் கழிவறைகளை அமைத்துள்ளனர். அது மிகவும் தவறு.
அதேபோல வரவேற்பு அறை என்று சொல்லக்கூடிய பகுதி மொத்த இடத்தில் தென்மேற்கு திறப்பாய் இருக்கக்கூடாது. தங்கும் விடுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக இடங்களாக விட வேண்டும். இது தெற்கு மற்றும் மேற்கு பார்த்த கட்டிடங்களுக்கும் பொருந்தும். பெரிய நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குளத்தை வடகிழக்கில் அமைக்க வேண்டும். சில இடங்களில் மாடியில் நீச்சல் குளங்களை அமைத்து உள்ளனர். அதுவும் வாஸ்து ரீதியாக தவறு ஆகும். ஏனெனில் தண்ணீர் வடகிழக்கில் இருக்கலாம் ஆனால் அது தரையோடு தரையாக உள்ள நீச்சல் குளத்திற்கு பொருந்தும். தரைக்கு மேலே தூக்கிய அமைப்பாக அமைக்கும் போது அது மேல்நிலை தண்ணீர் தொட்டியாக மாறிவிடும்.

 

vastu for lodge restaurant
vastu for lodge restaurant

மாடிகளுக்கு செல்லும் லிப்ட் அமைப்பினை குறைந்த பட்சம் மொத்த இடத்தில் வடமேற்கு பகுதியில் இருக்கும் அமைப்பாக பொருத்த வேண்டும். முடிந்தால் சரியான வடமேற்கில் அமைப்பது தான்  வாஸ்து அமைப்பில் நல்லது.

மிகச்சிறந்த வாஸ்து அமைப்பில் ஒரு தங்கும்விடுதியை கட்டும்போதும்,ஒரு ஊணவு விடுதியை அமைக்கும் போதும் அங்கே எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தொழிற்நிமித்தமாக தங்கும் மக்களும் இங்கே தங்கும் போது அதிர்ஷ்டகரமாக அவர்களின் தொழிலுக்கு துணைபுரியும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)