ஜோதிட இரண்டாவது பாவம்

ஜோதிடத்தில் இரண்டாவது பாவம்

ஜாதகத்தில் இரண்டாம் பாவம் என்று பார்க்கும் பொழுது, முதல் பாவம் என்பது தலையைக் குறிக்கும். இரண்டாம் பாவம் என்பது  முகம், கண் , வாய் , நாக்கு, பற்கள், தாடை, கண்ணம், தொண்டைப் பகுதி ஆகியவற்றை குறிக்கும். ஒருவரின் சொந்த கருத்தை விளக்கும் திறன், அவருடைய பார்வை ,நல்ல உணவை எடுத்துக்கொள்ளுதல், ஒருவரின் முக லட்சணம், போன்றவைகள் இரண்டாம் பாவத்தில் காரகங்களே, ஒருவருக்கு வரும் பணம், அவருடைய சொந்தப் பணமா? அல்லது கையிருப்பு பணமா? செல்வம் , சொந்தப் பணத்தைப் பாதுகாக்கும் திறன், பணமாக மாற்ற கூடிய நகைகள், மற்றும் ஆபரணங்கள், அவருடைய செல்வத்தை அனுபவிக்கும் யோகம், அவருடைய வாழ்க்கைக்கு பணமாக மாற்றத்தக்க பொருட்கள், வாழ்க்கைக்கு தேவையான பொழுது அவருக்கு வரும் பணம், சார்ந்த விபரங்களை தெரிவிக்கும் இடம், இரண்டாம் பாவம். தானியங்கள், உலோகங்கள், நகைகள், பண்டம், பாத்திரங்கள் அதேபோல டாக்குமெண்ட்  என்கிற பங்கு பத்திரங்கள், போன்ற விஷயங்கள் இரண்டாம் பாவம் ஆகும்.  இரண்டாம் பாகத்தை குடும்பம் என்று கூடச் சொல்லலாம்.

குடும்பத்தில் வரும் நல்லது, கெட்டது , குடும்ப ஒற்றுமை, சார்ந்த விஷயங்கள் இரண்டாம் பாகத்தின் காரணங்களாக வரும். அதே போல ஜாதகர் மற்றும் அவரோடு குடும்பத்தில் இருக்கக்கூடிய மக்களையும் குறிக்கும். ஒரு மனிதருக்கு பணம் வரும் வழிகள் மற்றும், பணம் செல்லும் வழிகள், இளமை கால கல்வி, தாயின் மூத்த சகோதரர், அதாவது பெரியம்மா அல்லது மாமா, செல்வத்தைச் சேர்க்கும் முயற்சியை வாழ்க்கைத் துணையின் வரவு, மற்றும் செலவு என்கிற மரணம் , உடல் உணவை செரிமானம் செய்யும் திறன், உடலுக்குத் தேவையான  சத்தான உணவு, ஏற்கனவே இருப்பதோடு புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுதல், போன்றவைகள் இரண்டாம் பாவத்தின் காரகங்களாகும். இரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான்,ஒரு மனிதனுக்கு பணம் என்கிற கையிருப்பு எப்போதும் இருக்கும். இரண்டாம் பாவம் 2,4,6 ,10  பாவங்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, நல்ல செல்வநிலையில் இருப்பார்கள். இரண்டாம் பாகம் 8 12 தொடர்பு  உள்ளபோது மேற்கூறிய காரணங்கள் எதிர் நிலையை கொடுக்கும். இரண்டாம் பாவம் 5,9 தொடர்பு கொள்ளும்பொழுது, இவர் பைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தை வாழ்நாள் முழுவதும் கையாளக்கூடாது. இரண்டாம் பாகம் 1 3 7 11 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, இவருடைய வாழ்க்கையில் நடுத்தர வாழ்க்கையும்  நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை யோடு, குடும்பத்தோடு சந்தோசமாக இருக்க கூடிய மனிதராக இருப்பார்கள்.