கிரகங்களில் சூரியன்

நவக்கிரகங்களில் சூரியன் தான் தலைவன். குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர். தந்தையை சார்ந்து தான் குடும்பத்  உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆகவே  தந்தையும், தந்தை சார்ந்த மக்களையும் சூரியன் குறிப்பார். ஆக சூரியன் காரகமாக தலைமை தாங்குதல், மனோதிடம், நேர்மை , ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன்,  தனி முயற்சி, வேலைவாய்ப்பு, அந்தஸ்து, கம்பீரத் தோற்றம், சுய கவுரவம் போன்ற விஷயங்களில் சூரியன் காரகம் வைப்பார். இருக்கின்ற கிரகங்களிலேயே சூரிய பகவான் மட்டுமே சுய வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய கிரகம். சூரியனில் இருந்துதான் மற்ற கிரகங்களுக்கு ஒளி கிடைக்கிறது. அந்த சூரிய ஒளி தான் மனித உடலில் கண்களுக்கும், கண்பார்வைக்கும் காரணமாக இருக்கின்றது. உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளான தலை, மூளை, இருதயம், முதுகுத்தண்டு போன்ற உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆவார். அதே போல உடலில் உள்ள முக்கிய உறுப்பாக உடல் நிற்பதற்கு பயன்படக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது எலும்பு. எலும்பு என்கிற விஷயத்தில் முதுகெலும்புக்கும் சூரியன் காரகம் ஆகும். சூரியன்  நெருப்பு கிரகம் என்பதால் மனித உடலில் காய்ச்சல், ஜலதோசம் போன்ற வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற விஷயங்களில் சூரியன் ஆளுமை பெறுகின்றார்.

சூரியன் சார்ந்த பலன் என்று பார்க்கும் போது,  ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் 2,4,6, 10 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, அதன் திசா, புத்தி காலங்களில் நல்ல பலன்களையும், பணம் சார்ந்த நிகழ்வு வெற்றியும் கொடுப்பார். மூன்று, ஏழு, பதினொன்று பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் போது,  நார்மலான ஒரு வாழ்க்கையை, நடுத்தர வாழ்க்கையை வழங்குவார். கடன் இல்லாத சந்தோஷமான ஒரு வாழ்க்கையை கொடுப்பார். அதே சூரியன் எட்டு பன்னிரண்டு பாவங்களுடன் தொடர்பு கொள்ளும்பொழுது ,வலி, வேதனை, விபத்து, போன்ற கஷ்டங்களை திசா புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.சூரியன் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது கடன் கேட்டால் கடன் கிடைக்கும். வேலை என்பது இல்லாத ஒரு நிகழ்வாக இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஒரு மனிதனை மாற்றி வைப்பார்.