ஜோதிடத்தில் 12ம் பாவம்

ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவம் மற்றும், பன்னிரண்டாம் பாவம் சார்ந்த காரகங்கள், பன்னிரண்டாம் பாவம் சார்ந்த பலன்களைத் தெரிந்து கொள்வோம்.

பன்னிரெண்டாம் பாவத்தில் உடல் சார்ந்த காரக  நிகழ்வு என்று பார்க்கும் பொழுது, உடலில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவுப் பொருட்களையும் குறிக்கும். ஏற்கனவே நம்முடைய ஜோதிட குருமார்கள் 6, 8, 12 பாவங்களை மறைவு ஸ்தானங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதாவது திரிகோண ஸ்தானங்கள்  வலிமையானது என்று சொல்லும்பொழுது, மறைவு ஸ்தானங்களும் வலிமையானது. அந்த வகையில் ஒரு மனிதனின் பிறப்பு, ஒரு மனிதனின் இறப்பு சார்ந்த சுழற்சி என்கிற விஷயத்தில் விடுபட்டு கடவுளோடு கலக்கின்ற நிலையை காட்டுவது பன்னிரண்டாம் பாவம். இந்த பாவத்தின் காரகங்கள் என்று பார்க்கும்பொழுது, ரகசிய சதி வேலை, ரகசிய திட்டம், சதியாலோசனை, மறைமுக எதிரிகள், அரசியல் கொலைகள், புரியாத புதிர்கள், மறைபொருள் ஞானங்கள், துப்பறியும் நிபுணர்கள், துப்பறியும் வேலைகள், உளவுத்துறை அதிகாரிகள், உளவுத்துறையில் வேலை பார்த்தல், ரகசிய முதலீடு, ஒரு மனிதனுக்கு மூளை செயலிழந்து போதல், தன்னை தாழ்த்திக் கொள்ளல், தாழ்வு மனப்பான்மை, தனிமையில் இருத்தல், எதிலும்  தோல்விகள், மறைந்து வாழ்தல், ஊர் விட்டு தள்ளி வைத்தல், அனாதை விடுதிகள், சிறைச்சாலைகள், ஒருவருக்கு ஏற்படும் அனைத்து தடைகள், நஷ்டங்கள், வரவுக்கு மீறிய செலவுகள், அதிக வட்டி கட்டி கடனை திருப்பிச் செலுத்துதல், மறைமுக எதிர்ப்பு, மருத்துவமனை சிகிச்சை, தண்டனைகள், அபராதங்கள், காவல்துறை தண்டங்கள், பருவநிலைக்கு எதியான வாழ்க்கை, நீதிமன்றத் தண்டங்கள், விபத்து தண்டச் செலவுகள், வெளிநாடு செல்லுதல், புதிய சூழ்நிலையில் வாழ்தல், வெளிநாட்டு குடியுரிமை, பணம் சொத்துக்களாக, முதலீடு, தனது வேலையை மற்றவர்களோடு பகிர்ந்து கொடுத்து நிம்மதியாக இருத்தல். இரண்டாவது தொழில், கிளைகளை விரிவுபடுத்துதல், வேலை முடித்து படுக்கைக்குச் செல்லுதல், அயன சயன போகம், உறக்கம், புதியவற்றைக் கண்டுபிடித்தல் இவை 6 பாவ 12ஆம் பாவ காரகங்கள் ஆகும். இந்த பாவம் எப்பொழுதும் 8 12 பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது . இந்த பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொண்டால் எதிலும் முன்னேற்றம், சிறந்த வேலை இருக்காது.  இந்த பாவம் 1, 3, 7 ,11 பாவங்களை தொடர்பு கொண்டால் நடுத்தர  மக்களாக இருப்பார்கள். இந்த பாவம் 2,4,6 10 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது மிகப் பெரிய வெற்றி அந்த மனிதர்களுக்கு இருக்கும்.