ஜோதிடத்தில் 11ம் பாவம்

ஜோதிடத்தில் 11ம் பாவம் மற்றும் 11ம் பாவ காரகங்கள் 11ம் பாவ பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

மனித உடலில் முழங்கால், மூட்டு களையும், உடலில் விட்டமின் மினரல் சார்ந்த விஷயத்தையும் குறிக்கும் பாவம் . ஒருவர் திருப்தி அடைவாரா? என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிக்கும் பாவம். தோல்வி அடையாமல் வெற்றியடைதல் நஷ்டம் அடையாது இருத்தல். முதலீட்டில் வருமானம் வருதல்.  புரிந்த ரகசியங்கள். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருத்தல். வரவுக்கு மீறிய செலவுகள் இல்லாது லாபத்தோடு இருத்தல். எதிலும் தடை இல்லாத வாழ்க்கை.சந்தோஷம் சார்ந்த விஷயங்களை கொடுக்கும் பாவம் பதினொன்றாம் பாவம் ஆகும் . 11ம் பாவம் நீண்டகால நண்பர்களைக் குறிக்கும் பாவம். ஒருவருக்கு கடனை அடைத்து அசல் வட்டியோடு கட்டும் என்பதை சொல்லும் பாவம். 11 ஆம் பாவம் வீட்டுக் கடன் வாங்கினால் அடைப்போமா? மாட்டோமா ? என்பது பற்றி சொல்லும் பாவம். மனிதனின் நிம்மதியை குறிக்கும் பாவம். ஒருவரின் ஆசைகள் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்று சொல்லும் பாவம். மனிதனுடைய வாழ்க்கை துணையை குறிக்கும் பாவம். அதாவது மருமகன், மருமகள் பாவம். அவருடைய ஆசை, விருப்பம், அபிலாசை, குறிக்கோள், வெற்றி , எதிர்ப்பு சக்தி, நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய நலம் விரும்பிய மக்கள் , முகஸ்துதி செய்யும் மனிதர்கள், சேமிக்கின்ற பழக்கவழக்கம், ஆசை நிறைவேறிய பின் கிடைக்கும் சந்தோசம், ஒருமித்த கருத்துடைய மக்கள், குழு, சங்கம், கூட்டம், மாநாடு, தந்தைவழி சித்தப்பா, உச்ச நிலைக் கல்வி, இறுதி நிலைக் கல்வி, முழு அறிவு பெறுதல், டாக்டர் பட்டம், பிஎச்டி, முனைவர் பட்டயம், பாராளுமன்ற, நாடாளமன்ற, நகராட்சி, தலைமைப்பதவி, நோய் குணமடைதல், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல், போன்றவை 11ம் பாவ காரகங்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரு மனிதனுக்கு 11 ஆம் பாவம் கெட்டுப் போய்விடக் கூடாது. ஏனெனில்  எதிலும் திருப்தி அடையாத மனிதர்களாக வாழ்வார்கள். ஆகவே 8,12 பாவங்களை 11 ஆம் பாவம் தொடர்பு கொள்ளக் கூடாது. அதேபோல் 2 ,4,6,10 பாவங்களை 11ம் பாவம் தொடர்பு கொள்ளும்பொழுது மிகப்பெரிய அளவில் பொறுப்பான,  பதவியில் இருக்கும் மனிதர்களாக இருப்பார்கள். அதன் மூலம் நல்ல வருமானம் வரும். அதே போல 11 பாவம் .5,9 தொடர்பு கொள்ளும்பொழுது எதற்கும் கவலைப்படாத, எதற்கும் அலட்டிக் கொள்ளாத, மனிதர்களாக இருப்பார்கள். அதே 11 ம் பாவம் 1,3,7 ,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்ச்சியான சந்தோசமான மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த மனிதர்களாக வாழ்வார்கள்.