ஜோதிடத்தில் பத்தாம் பாவம்

ஜோதிடத்தில் பத்தாம் பாவம்

  பத்தாம் பாவம் எப்படி ஒரு மனிதனுக்கு வேலை செய்யும் என்பதனை தெரிந்து கொள்வோம். ஒரு மனித உடலில் தொடைப் பகுதியும், ஒரு பொருளை உற்பத்தி செய்ய இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரம். உடல் உறுப்புக்கள் அதாவது, கிட்னி, கல்லீரல், குடல் போன்ற பாகங்களை 10 ஆம் பாவம் குறிக்கும்.  இது கர்ம திரிகோண பாவமாக இருக்கின்றபடியால், உத்தியோகத்திற்கு, தன்னுடைய தலைமைப் பதவிக்கு, பொருத்தமான பாவமாகும். பத்தாம் பாவம் தான், ஒரு மனிதனுக்கு அரசு வேலைக்கு துணை புரியக் கூடிய ஒரு பாவம். இந்த பாவம் சிறப்பு பெறும் பொழுது பொருளாதாரத்தை, தொழில் மூலமாக சுயமாக சம்பாதித்து பெறக்கூடிய மனிதர்களாக இருப்பார்கள். ஒருவருக்கு நிரந்தர தொழில் கொடுக்கும் பாவம் பத்தாம் பாவம். ஒருவருக்கு பொருளாதார வலிமையை கொடுக்கும் பாவம் பத்தாம் பாவம் . ஒரு மனித வாழ்க்கையில் அகம் புறம் என்று பிரித்தால் புறத்தைக் கொடுக்க கூடிய பாகம் பத்தாம் பாகம். உலகில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் பத்தாம் பாவம் தான் தலைமையிடம். ஒரு மனிதன் தொழில் சிறப்பாக செய்ய பத்தாம் பாவம் சிறப்புப் பெற வேண்டும் .

ஒரு மனிதன் வேலைகள் சிறப்படைய பத்தாம் பாவம் சிறப்பு பெற வேண்டும் . பெரிய பதவிகள்  நீடித்த நிலையில் இருக்க பத்தாம் பாவமும் துணைபுரிய வேண்டும் .  சமூக அந்தஸ்து, நிர்வாகத்திறன், எதிலும் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு, கடமை, அதிகாரம், ஈமச் சடங்கு, எதிலும் திருப்தி என்ற மனோநிலை, அரசாங்கத்திலிருந்து வருமானம், மனைவி வழியில் சொத்து, இளைய சகோதரர் சார்ந்த எதிரிடை பலன். மூத்த சகோதரர் சார்ந்த விரைய பலன். சங்க கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல். தத்து குழந்தை. வாழ்க்கைத் துணையின் தாய். மனைவியின் தாய். குழந்தையின் நோய் பற்றி விவரம், எப்போதும் பொருளை உற்பத்தி செய்யும் நிலை மேற்கூறிய நடவடிக்கை சார்ந்த விசயங்களுக்கு பத்தாம் பாவத்தின் காரகங்களாகும். ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று சொன்னால், பத்தாம் பாவம் மூலமாக சொல்ல முடியும்.அதாவது ,பத்தாம் பாவத்தை முடிவு செய்துதான் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா? வேண்டாமா? என்பதை நாம் முடிந்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.  ஆக ஒரு மனிதனுக்கு பத்தாம் பாவம் 2,4,6,10 பாவங்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, நல்ல பொருளாதார வலிமை பெற்ற மனிதராக இருப்பார்கள். மிகப்பெரிய ஒரு தொழிலதிபராக இருப்பார்கள்.எப்படி இருந்தாலும், கூடவே மற்ற பாவங்களும் துணைபுரிய வேண்டும். ஒரு பத்தாம் பாவம், 8 12 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, எக்காலத்திலும் ஒரு தலைமைப் பதவியில் இல்லாத மனிதராகத்தான் தாழ்ந்த நிலையில் இருப்பார். பத்தாம் பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, எதையும் இலட்சியம் செய்யாத, பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத, மனிதர்களாகஇருப்பார்கள். பத்தாம் பாவம் 1 ,3, 7 ,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, ஒரு நடுத்தர வாழ்க்கையும் , ஒரு  மேல்நிலை அதிகாரிக்கு கீழ் வேலை செய்யும் சராசரி மனிதராக இருக்கக் கூடிய  ஒரு நிலையை கொடுக்கும்.