ஜோதிடத்தில் நான்காம் பாவம்

ஜோதிடத்தில் நான்காம் பாவம்:

ஜாதகத்தில் நான்காம் பாவம் என்று பார்க்கும் பொழுது உடலின் தலைக்கு கழுத்துக்கு கீழ் இருக்கக் கூடிய பகுதிகள் நான்காம் பாவம் ஆதிக்கம் செய்கிறது. மனித உடலில் இருக்கும் நுரையீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை நாலாம் பாவம் உரிமை எடுத்துக் கொள்கிறது

. அதேபோல ஜாதகருடைய அசையாத சொத்துக்கள் அனைத்தும் நான்காம் பாவத்தின் காரகங்களாகும். அசைகின்ற சொத்துக்கள் கூட வண்டி வாகனங்கள் நான்காம் பாவத்தின் காரகங்களாகும். ஒருவருக்குச் சொந்தமான அனைத்து உறவினர்களையும், ஜாதகரின் பிறந்த ஊர், பிறந்த இருப்பிடம் , ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்ற ஒரு வீடு, அனைத்தும் நான்காம் பாவத்தின் காரகங்களாகும். 4-ஆம் பாவம் என்பது  நேர் மறையாக இருப்பது , வேளைக்கு ஒரு நபரை எடுத்தால் அவர் கொடுக்கும் கூலிக்கு மட்டுமே சம்பளம் என நினைக்கும் நபர்கள், வேலைக்கு கூலி கரார் நபர்கள்,  உணர்வுகளுக்கு வேலை இல்லாத நபர்கள்,  ஐந்தாம் பாவம் காதல் காமம் என்று சொன்னால், உடல் கவர்ச்சி, வர்ணனை, அழகு என்று சொன்னால் இதற்கு எதிரிடை நான்காம் பாவம். கற்பு, உடல் சார்ந்த ஒழுக்க நிலை, எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்லுதல் நான்காம் பாவம், மனப்பாடம் செய்தல், பாலிஷ் செய்யாத பொருள்கள், ஒப்பனை மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம், எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் வதந்திகளை நம்பாது இருத்தல், பாரபட்சமற்ற நடவடிக்கை, இவை  நான்காம் பாகங்கள், நாத்திகர்கள், பகுத்தறிந்து பார்த்தல், தொன்றுதொட்டு வந்த மரபுவழி ஏற்காது புரட்சிகர சிந்தனை, எதையும் யாருக்கும் இலவசமாக தானமாக தராது இருத்தல், ஆய்வுகள் என்று செய்யாமல் பணத்தை வீணடிக்காமல் அப்படியே பயன்படுத்துதல், அச்சுக் கூடங்கள், வார்ப்பு பட்டரைகள், இயந்திரத்தனமான வாழ்க்கை , வெளிநாடு செல்லாமல் சொந்த ஊரில் வாழ்தல்,  ஒரு மனிதனுக்கு பெற்றெடுத்த தாயின் பாவம் நாலாம் பாவம், ஆரம்பக்கல்வி, வீடு, நிலம், வாகனம், தானியக் களஞ்சியங்கள், வயல்வெளிகள், பள்ளிக்கூடங்கள், வருமான கட்டிடங்கள், வாடகை கட்டிடங்கள்,  புராதன பொருட்கள், ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் பொருள்கள், எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் இயந்திரம், தனிப்பட்ட மனிதர் அந்தரங்க வாழ்க்கை, புதையல், சுரங்கம், வீட்டு உபயோகப்பொருள், திருட்டுச் சொத்து ,  இடமாற்றம் செய்த சொத்துக்கள், அதேபோல அரசாங்க புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருபது,  தேவைக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான உடலில் சக்தி, முன்னோர் சொத்துக்கள், கிணறு, ஆறு, ஏரி, கல்லறை இவையாவும் நான்காம் பாவத்தின் கொண்டு காரகங்கள்.

  ஒருவர் ஜாதகத்தில் 2,4, 6, 10 பாவங்களை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக அவர்கள் ஒரு வீடுகளோ, இரண்டு வீடுகளோ, ஒரு தொழிற்சாலைகளோ ஏதாவது ஒன்று அவர் கையில் கண்டிப்பாக இருக்கும். அதே நாலாம் பாவம் மூன்று, ஏழு, பதினொன்று பாவ  தொடர்பு கொண்டால் குடியிருப்பதற்கு ஒரு சாதாரண வீடு இருக்கும். பெரிய அளவில் ஒரு தொழில் சார்ந்த கூடங்கள் இருப்பது கடினம் . அதே நான்காம் பாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது, எப்பொழுதும்  சும்மா சுற்றிக் கொண்டிருக்கிற, இருப்பதற்கு இடம்  இல்லாத மனிதர்களாக இருப்பார்கள். நான்காம் பாவம் 8 ,12 பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது, இடங்கள், நிலங்கள் சொத்துக்களால், வலி வேதனை, போன்ற பிரச்னைகள் இருக்கும் மனிதர்களாக இருப்பார்கள்.