ஜோதிடத்தில் சுக்கிரன் காரகங்கள் கிரக … – சாரஜோதிடம் KP ASTROLOGY

நவகிரகத்தில் பணம் சார்ந்த நிகழ்வில் கையில் வைத்திருக்கிற பணத்திற்கு பொறுப்பாளி யார் என்று கேட்டால் சுக்கிரபகவான்.  தனக்காக ஒரு உலகத்தை உருவாக்கிய சுக்கிராச்சாரியார் அதன் தலைவராக இருக்கின்றார். மற்றும் வாழ்வில் நளினங்கள், தான் வாழ ஒருவரை சந்தோஷப்படுத்தி கபட வேஷம் போடுவது, நல்லவனை போல இருப்பான் பரம சண்டாளன் என்று சொல்லக்கூடிய ஒரு பழமொழி இருக்கிறது அல்லவா? அந்த பழமொழிக்கு சுக்கிரன் காரகம்.  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், வார்த்தை ஜாலங்களால் மயக்குதல், பல மக்களை நம்ப வைத்து கடைசி வரை தன்னுடைய உண்மை முகத்தை வெளியில் தெரியாது வைத்திருப்பது, போன்ற நிகழ்வுகளுக்கு சுக்கிரன் காரகமாக இருப்பார். கிரகங்களில் குரு பேரின்ப காரகம் சொன்னாலும், அதற்கு நேர்மாறான சிற்றின்ப விஷயங்களுக்கு சுக்கிரனே காரகமாவார். கிரகங்களில் சூரிய ஒளியை அப்படியே எடுத்து பிரதிபலித்து மற்ற கிரகங்களை விட அழகாக பிரகாசிக்கக் கூடிய  விடிவெள்ளி என்று சொல்லக்கூடிய அதிகாலை நேரத்தில் நாம் தென்கிழக்கு திசையில் இருந்து பார்க்க முடியும். தென்கிழக்கு திசையில் மட்டுமே நமது சுக்கிரன் கண்களுக்குத் தெரியும். அதனால்தான் வீட்டில் அடுப்பு வைக்கக்கூடிய தென்கிழக்கு மூலையை சுக்கிரனுக்குரிய இடமாக நம்ம பாவிக்கின்றோம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் சொல்லலாம், ஒரு ஆண் தன் மனைவியை அல்லது காதலியை பலகோணத்தின் ரசிக்க முடியும். அதே உடன்பிறந்த சகோதரிகளை ரசிக்க முடியாது. ஆகவே ஆண்களுக்கு சுக்கிரன் களத்திர காரகன். பெண்களிடம் இருந்து பெறக்கூடிய இன்பத்திற்கு சுக்கிரனே காரகம். கவர்ச்சி அழகு ஒருவரின் உணர்வுகளை தூண்டுதல், மற்றவர்களுடைய உழைப்பு எடுத்து தன்னுடைய உழைப்பில் குறைத்து இருத்தல். இல்லற உறவுகள், கலைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் நாட்டம், இதுபோன்ற விஷயங்களுக்கு சுக்கிரன் காரகன். உடல் சுகத்தில் அது ஆண் பெண் யாராக இருந்தாலும் சுக்கிரன் காரகன். ஆடம்பரம், சொகுசு வாழ்க்கை, பகட்டு வாழ்க்கை, உல்லாச வாழ்க்கை, மனதிற்கு இதமளிக்கும் அனைத்து விஷயங்களுக்கும் சுக்கிரன் தான் காரகன்.குரு அடுத்து இரண்டாவது தன காரகன் ஆகிறார் சுக்கிரன். வாகன காரகன். ஒருவரிடம் இருக்கும் சொந்த பணத்திற்கும், பொன் பொருள்களுக்கும், கருப்புப் பணத்துக்கும் சுக்ரனே காரகர். தன் சொந்தப் பணத்தைக் கொண்டுதான் ஒருவர் ஆடம்பரம், பகட்டு, உல்லாச விஷயங்களுக்கு மகிழ்ச்சியாக செலவு செய்யமுடியும். அதற்கு காரக சுக்கிரன். தங்கத்துக்கு அடுத்தப்படியாக மனிதர்களால் பயன்படுத்தப்படும் விலை மதிப்புள்ள உலோகம் வெள்ளி ஆகும். அதற்கு காரகம் சுக்கிரன். அறுசுவைகளில் நம்மை மயக்கும் இனிப்புச் சுவைக்கு காரணம் சுக்கிரன். சூரிய குடும்பத்தில் சுக்கிரனை தவிர மற்ற எல்லா கோள்களும் இடமிருந்து வலமாக மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஆனால் சுக்கிரன் மட்டும் விதிவிலக்காக இடமாக தன்னைத்தானே சுற்றி வருகிறது. அதனால்தான் மற்ற கிரகங்களின் காரகங்களில் இருந்து விடுபட்டு போலியான காரகங்களை தன்னுள் வைத்திருக்கிறது  சுக்கிரன்.

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு  புத்துணர்ச்சியூட்டும் ஒரு மனித வாழ்க்கையில் 8 மணி நேரத்தை தூங்குவதற்கு கொடுப்பது சுக்கிரன். சுக்கிரன் பாலின இன்பங்களுக்கும் காரகம். ஆண் பெண் உறவின் போது வெளிப்படும் விந்து, சுரோணித இயக்கங்களுக்கு சுக்கிரன் காரகம். ஆண் பெண் பாலின வேறுபாடுகளை ஒருவருடைய உடலில் கொடுக்கும் ஹார்மோன் என்ற விஷயத்துக்கு சுக்கிரன் காரகம்.  மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, கள்ளத்தொடர்புகள், உடன்உறுப்புக்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்கும் தன்மை, கலைஞர்கள், விபச்சாரிகள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை அலங்காரங்கள், சொகுசு மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள், உறவுமுறைகள், மனைவி, உயர்ரக மதுபான வகைகள், வைரம், இறைவடிவில் லட்சுமி போன்ற காரகன் சுக்கிரன்.  எது எப்படி இருந்தாலும் கிரகங்களில் சுப கிரகமாக பார்க்கப்பட்டாலும், சுக்கிரன் 8, 12 பாவங்களில் தொடர்பு கொள்ளும்போது எதிரிடையான தீய கிரகத்தின் பலனை கொடுப்பார். ஒரு ஜாதகத்தில் தன்னுடைய தசா புத்தி காலங்களில் அதே சுக்கிரன் 2,4,6 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது அற்புதமான பணம் சார்ந்த நிகழ்வில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பார்.  5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது , வேலை இல்லாத, கடன் கேட்டால் கடன் கிடைக்க கூடிய நிலைக்கு ஒரு மனிதனை தள்ளிவிடுவார்.  அதே சுக்கிரன் 1, 3, 7 ,11 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது, நல்ல அழகாக நடுத்தர வாழ்க்கையை, வாழக் கூடிய கடன் இல்லாத வாழ்க்கை,  ஒரு மனிதனுக்கு சுக்கிரன் கொடுப்பார். எது எப்படி இருந்தாலும் சுக்கிரன் மனித வாழ்க்கைக்கு சுகம் தரும் கிரகம்.