ஜோதிடத்தில் சனி கிரகம்/சனி கிரக காரகங்கள்/sani or Saturn/jothidam/KP astrology in Tamil

சனிக்கிரகம் சூரிய குடும்பத்திலேயே கடைசியாக இருக்கக் கூடிய தொலை தூரத்தில் இருக்கக் கூடிய கிரகம். சூரிய குடும்பத்தை சுற்றி வர 29 .5 ஆண்டுகள் சனி கிரகத்திற்கு காலம் எடுத்துக்கொள்ளும் . மிகத் தொலைவில் இருப்பதால் சனியை மந்தக் கிரகம் என்று அழைக்கின்றோம். ஒரு மனிதன் மந்தமாக செயல்படும் சோம்பேறிகளுக்கு, உடல் ஊனமுற்றோருக்கும், வயதானவர்களுக்கும்,வயதான உடல் தோற்றம் உடைய நபர்களுக்கும் சனி காரணமாக இருக்கின்றார். எந்த விஷயங்களையும் சனி பகவான் காலதாமதம் செய்வார்.,  குறிப்பாக உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தையும் சனி தாமதப்படுத்தி தான் செய்வார். சனி சூரியனிலிருந்து தொலை தூரத்தில் இருப்பதால், சூரிய ஒளி சனி கிரகத்திற்கு கிடைக்காது. அதனால் இதனை இருட்டு கிரகம் என்று சொல்கின்றோம்.

அடித்தட்டு மக்கள் சனி காரகம். கீழ்ப்படிந்து நடப்பவர்கள் சனி காரகம். தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் சனி காரகம். அழுக்கு நிறைந்த பகுதியில் வசிப்பவர்கள் சனி காரகம். கருப்பு நிறத்தோடு இருக்கின்ற மனிதர்கள் சனி காரகம். ஆளும் வர்க்கத்தினரை எளிதில் காணாத மக்கள் சனி காரகம். கடின உழைப்பாளிகள் சனி காரகம். கடைநிலை ஊழியர்கள் சனி காரகம். வேலைக்காரர்கள், மற்றவர்களால் உபயோகப்படுத்திய பொருட்களை வைத்திருப்பவர்கள் சனி காரகம். மனச்சோர்வு உள்ளவர்கள் சனி காரகம். கழிவுப்பொருட்கள், ஏழ்மை, கடின உழைப்பு போன்ற விஷயங்களும் சனி காரகம். இரவு நேரத்தில் ஒரு பொருளை அபகரிக்கும் குணம் கொண்ட மனிதனுக்கு சனி காரகம். சிறிய அளவில் திருடர்கள் சனி காரகம். வேலைக்காரர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் தொழில் நடக்கும். ஆகவே தொழிலுக்கு சனி காரகம். தொழிலுக்கு உழைக்கும் மக்களின் பங்கு அதிகம். ஆகவே சனி காரகம். ஆபீஸ் பாய். வாட்ச்மேன், வீட்டு வேலைக்காரர்களுக்கு சனி காரகம். துக்க நிகழ்வுகள் சனி காரகம்.  அசுப நிகழ்வுக்கு சனி காரகம். உலோகங்களில் இரும்பு சனி காரகன். கருப்பு நிறம் சனி காரகம். இரும்பு சனியின் காரகம் . உடலில் தோல் பகுதிகள் சனி காரகம். கரிய நிறமும் சனி காரகம். உடலிலிருந்து வரும் அனைத்து கழிவுப் பொருள்களுக்கும் சனி காரகம். இரவுவேளை சனி காரகம். பொய் சொல்லுதல் சனி காரகம். கஞ்சத்தனம் சனி காரகம். சின்னசின்ன திருட்டு சனி காரகம். வறுமை நிலை பரிகாரங்கள் சனி காரகம். ஏமாறுதல் சனி காரகம். தயக்க நிலை, மிகவும் அமைதியான வீட்டு விலங்குகள் சனி காரகம். தாழ்ந்த ஜாதி சனி காரகம். பக்கவாதம் சனி காரகம். விடாமுயற்சி சனி காரகம். விவேக நிலை சனி காரகம். இழப்பு நிலை சனி காரகம். தத்துவ நிபுணர்கள் சனி காரகம். தன் நிலை தாழ்ந்து வாழ்தல் சனி காரகம். நீலக்கல் சனி காரகம். தெய்வங்களில் அய்யனார் சனிகிரகம். கருப்பசாமி சனி காரகம். ஐயப்பசாமி சனி காரகம். நீச்ச தெய்வங்கள் சனி காரகம். கிராமப்புற, ஒதுக்குப்புற தெய்வங்கள் சனி காரகம்.

கிரகங்களில் சனி கிரகத்தை அசுப கிரகமாக சொன்னாலும், சனி கிரகம் ஒரு ஜாதகத்தில் இரண்டு, நான்குஆறு, பத்து பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது அதி அற்புதமான பலன்களைக் கொடுப்பார் . அதையே சனிபகவான் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது சோம்பேறியாக வாழ வைப்பார். அதே சனிபகவான் 8, 12 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது மிகக் கஷ்டமான மனித வாழ்க்கையில், இது போல் ஒரு கஷ்டம் இருக்காது என்று வாழக்கூடிய நிலைக்கு ஒரு மனிதனை தள்ளுவார். அதே சனிபகவான் 1, 3, 7, 11 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது நடுத்தர வாழ்க்கையும், ஒரு கீழ்நிலை கொஞ்சம் அதற்கு மேலான வேலை செய்யக்கூடிய மனிதர்கள் உறுவாகிவிடுவார்கள்.