ஜோதிடத்தில் கேதுவின் காரகங்கள்

ராகுவைப் போலவே கேதுவும் ஒரு நிழல் கிரகமாகவும் சந்திரனின் நிழல் கேது என்று ஜோதிட உலகம் சொல்லுகின்றது . எப்படி சனி போல என்று சொன்னோமோ,கேதுவை செவ்வாயைப் போல என்று சொல்லுவோம். ஏனெனில் கேதுவின் திசை 7 வருடம், செவ்வாயின் திசையும் 7 வருடம்.  எதையும் பெரிய அளவில் காட்டும் ராகு, கேதுவோ எதையும் பெரிய அளவில் செய்துவிட்டு மறைத்து வைக்கும். கேது பாம்புவின் வால் பகுதியாகும். போதைப்பொருளுக்கு காரகமாகும் குறிப்பாக, அபின், கஞ்சா,பெத்தடின் போன்றவை கேதுவின் காரகங்கள். அதனை சிறிய அளவில் அருந்தினாலும் தன்னிலை மறந்து விடுவார்கள். அதுவே ராகுவின் காரகமான அயல்நாட்டு மதுபானங்களை உட்கொண்டால் பெரிய அளவில் சத்தம் போடுவார்கள். அடுத்தநாள் அடங்கி விடுவார்கள்.ஆக எதையும் உடைப்பது, துண்டிப்பது, அருத்து விடுவது, இரண்டாக வெட்டுவது இவை எல்லாமே கேதுவின் காரகங்கள். கலகக்காரர்கள், சீர்குலைவு செய்யும் நபர்கள், மிரட்டல் விடுபவர்கள், வெடி குண்டு வைப்பவர்கள், பட்டாசு வைப்பவர்கள், நாட்டு வெடி குண்டு வைப்பவர்கள், தீவிரவாத செயலில் ஈடுபடுபவர்கள், ஒளிந்திருந்து கொரில்லாத் தாக்குதல் நடத்துபவர்கள், தனிநாடு கேட்பவர்கள் எல்லாமே கேதுவின் அம்சம் ஆகும்

. ராகு பெரிய பாத்திரம் என்று சொன்னால், குறுகிய குழாய் கள், பைப்லைன், கயிறுகள், உடலில் உள்ள குடல், குறுகிய பாதை, குறுகிய முட்டுச்சந்து, ஒற்றையடிப்பாதை இவையாவும்  கேதுவின் காரணமாகும். ரகசிய சதி, புலனாய்வுத் துறைக்கும் கேதுவின் காரணமாகும். ஏழ்மை நிலை, மதநம்பிக்கை, தத்துவ ஞானம், மோட்சம், வேதாந்தம், மனநல தனிமையை விரும்புதல், தவம் செய்ய காடு மலை செல்லுதல், உடல் முழுவதும் புண்கள் இருப்பது,  உடலில் அமிலம் பட்டு விடுவது, மருத்துவத்துறை, மௌன விரதம்,  பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவியுலக தொடர்புகள், பிரிவினைவாதம், விவாகரத்து, எளிதில் கண்டுபிடிக்க முடியாத மோசடி நபர்கள், குறுக்குவழி, நெருக்கடிகள், தெய்வங்களில் விநாயகர், நவரத்தினங்களில் வைடூரியம், இவை எல்லாமே கேதுவின் காரகங்களாகும்.

எப்படி அரபு நாட்டை சேர்ந்தவர்களை ராகு என்று சொன்னோம்  அதுபோல ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களை கேது என்போம். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கும் நுண்ணிய அறிவு என்பது வேண்டும். அந்த வகையில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த மக்களே அதிக கண்டுபிடிப்புகளை கடவுளுக்கு நிகரான கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளனர். ஆகவே நுண்ணறிவுக்கு கேதுவும், மேலோட்டமான அறிவுக்கு புதனையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் ஒருவர் ஜாதகத்தில் 8 ,12 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, கேதுவை போல தீமை செய்யக்கூடிய கிரகம் இந்த உலகத்தில் இருக்காது. அதே சமயம் 2, 4, 6,  10 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது மிகப்பெரிய ஒரு ஞான மார்க்கத்திலும், ஆன்மீகத் துறையிலும், கடல் சார்ந்த வழியிலும் ஒரு பெரிய முன்னேற்றத்தை பெறக்கூடிய மனிதர்களாக இருப்பார்கள். அதே அதே கேது 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்போது மிகப்பெரிய சந்யாச வாழ்க்கை வாழ்வார்கள். அதேபோல 1,3,7, 11 பாவங்களில் கேது தொடர்பு கொள்ளும்போது அந்த மனிதர் சாதாரண வாழ்க்கை, எதிலும் பற்று இல்லாத, ஏன் திருமணம் கூட ஆகாத மனிதர்களாக கூட இருப்பார்கள்.