ஜோதிடத்தில் ஒன்றாம் பாவம்

  ஜோதிடத்தில் காரகங்கள் அனைத்தும், பாவங்கள் அனைத்தும் கிரகங்களை வைத்தும் பலன் சொல்லும்பொழுது சரியான முறையில்  ஜோதிடத்தை சொல்ல முடியும். அந்த வகையில் பாவங்கள் என்பது ஒரு மனித வாழ்க்கைக்கே துணை செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த அந்த வகையில் விதி என்கிற வகை கடவுளால் கொடுக்கப்பட்டது பாவங்கள் ஆகும்.,அம்மா வயிற்றில் பிறக்கும் போது பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைதான்   12 பாவங்கள். அதனை  நம்மால் மாற்றவே முடியாது. வாழ்க்கையில் மாறிக் கொண்டிருப்பது மதி என்கிற சந்திரனை வைத்து  அடிப்படையில் இருக்கும் திசாபுத்திகளே ஆகும்.  அந்த வகையில் ஒவ்வொரு பாவங்களையும் நமது தெரிந்து கொள்வோம்.

பாவங்களில் தொடர்பு கொள்ளும் கிரகங்களை வைத்து பலனை துல்லியமாகப் பார்க்க முடியும். அந்த வகையில் 1 முதல் 12ம் பாவங்களை தெரிந்து கொள்வோம். முதல் பாவம் என்பது இலக்கண பாவமாகும். இந்த லக்ன பாவம் என்பது ஜாதகரின் தனித்தன்மை, அவருடைய நடவடிக்கை, அவருடைய பழக்க வழக்கம் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம், உடல் உறுப்புக்களில் தலையின் மேல் பகுதி, மூளை, போன்றவற்றை இந்த பாவம் எடுத்துக்கொள்கிறது. லக்ன பாவம் என்பது 12 பாவங்களையும் உள்ளே வைத்து இருக்கிறது. அதாவது மூளை என்கிற விஷயம் இருப்பதைப்போல, உடலில் உயிர் இருக்கும் இடம் மூளை ஆகும். அதன் காரக அதிபதி  லக்னம் ஆகும்.  மனித உயிருக்கு  மனிதனின் தலைமைப்பதவி, தலைமைப் பொறுப்பில் இருப்பவர், சுய திறமை என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள, லக்ன பாவத்தில் பார்க்கவேண்டும். ஜாதகரின் அனுபவிக்கும் யோகம், ஜாதகரின் எண்ண ஓட்டம், அவருடைய சுய முயற்சி, அவருடைய செயல், மனித நடவடிக்கை, அவரின் ஆரோக்கியம், அவருடைய பெருந்தன்மை, அவரின் ஒழுக்கம், அவரின் புகழ், அவரின் நிர்வாகத் திறன், ஒரு துறையில் சாதனை படைக்கும் திறமை, வெற்றி அல்லது தோல்வி பெறுதல், ஆண்மை மற்றும் பெண்மை தன்மை, உடலின் நோயெதிர்ப்பு திறன், தான் என்கிற எண்ணம், பணத்தைவிட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல், கௌரவத்தை இழந்து பணத்தை பெறுதல், இவையெல்லாம் லக்ன பாவத்தில் நிலைகளாகும்.

ஒரு ஜாதகத்தில் லக்ன பாவம் கெட்டுவிட்டால்  மற்ற  11 பாவங்கள் அவருக்கு வேலை செய்யாது.லக்ன பாவம்  தனது பாவமான 1 ,முதல் 3, 7, 11 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, ஒரு அற்புதமான மனிதராக, எதற்கும் ஆசைப்படாத மக்களாக இருப்பார்கள். அதே 1 ஆம் பாவம் 2,4,6 10 பத்து பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, மிகவும் கறாராக உள்ள, எப்பொழுதும் புறம் சார்ந்த மனிதராக, எப்பொழுதும் வெளியில் பணத்திற்கு சுற்றி கொண்டு உள்ள மனிதராக, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய மனிதராக இருப்பார்கள். அதேபாவம் 5,9 பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது, சராசரி இறைவனுக்கு பணிவிடை சார்ந்த, அதிகம் வேலை செய்யாத மனிதர்களாக இருப்பார்கள். அதே 1 ஆம் பாவம் 8,12 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது, தலை சார்ந்த விபத்து, குழப்பமான ஒரு தெளிவில்லாத, கஷ்டத்தை சந்திக்க கூடிய, மனிதர்களாக இருப்பார்கள்.இவைகள் தவறான தசாபுக்தி காலங்களில் மேற்சொன்ன பலன்களை கொடுக்கும்.